Back to Top

 சிறைச்சாலையில் இருந்த இளைஞன்  மரணம்

சிறைச்சாலையில் இருந்த இளைஞன் மரணம்

September 6, 2019  01:21 pm

Bookmark and Share
மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி. கமல்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை வாழைச்சேனையில் கைகலப்பு ஒன்றிற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)