Back to Top

 குளவி கொட்டுக்கு இலக்காகி 50 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி 50 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

September 6, 2019  01:46 pm

Bookmark and Share
பொகவந்தலாவ, நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ, லொய்னோன் லின்போட் தோட்ட பகுதியில் 35 பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் - எல்பட மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 20 பெண் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 55 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (06) காலை 10 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தோட்ட மக்களும் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது, தேயிலை மலையின் அடி வாரத்திலும் மரத்திலும் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக, காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான 55 தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு, காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)