Back to Top

ரணில் - சஜித் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ரணில் - சஜித் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

September 8, 2019  08:11 am

Bookmark and Share
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று (08) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த பேச்சுவாத்தையை இன்று அலரி மாளிகையில் நடாத்த திட்டமிட்டு இருந்த போதிலும், அமைச்சர் சஜித் பிரேமதாச ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Most Viewed