Back to Top

100 மில்லியன் ரூபா நிதியில்  அபிவிருத்தித் திட்டங்கள்

100 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்கள்

September 10, 2019  10:59 am

Bookmark and Share
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் 100 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டம் (எல்.டீ.எஸ்.பி.) தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் நேற்று (09) மாலை நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், பொறியியலார் ரி. சர்வானந்தன், கணக்காளர் ஏ.எச். தஸ்தீக் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எம். அஹத், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சாஹிர் ஆகியோர் குறித்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ள முடியுமான அபிவிருத்திப் பணிகள், அவற்றைத் தெரிவு செய்வதற்கான வரையறைகள், நிபந்தனைகள் மற்றும் மூலோபாய நடவடிக்கைகள் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ள முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 வரையான 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா 25 மில்லியன் வீதம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவு செய்யப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் 4 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் பிரகாரம் வட்டார ரீதியாக மக்கள் பங்கேற்புடன் அடையாளம் காணப்பட்ட வேலைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, அவற்றுள் ஒவ்வொரு வட்டாரத்திலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.