Back to Top

பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

September 11, 2019  01:25 pm

Bookmark and Share
சிறிய பிக்குகள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரவ்பத்தான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை இன்று (11) பதவிய நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்மெத்த சமிந்த கலபொட எனும் உட்டியா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பட்டதை அடுத்து குறித்த நபரை ஹொரவ்பத்தான பொலிஸார் கைது செய்திருந்தனர்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.