Back to Top

தொடரும் வேலைநிறுத்த போராட்டங்கள்

தொடரும் வேலைநிறுத்த போராட்டங்கள்

September 11, 2019  02:37 pm

Bookmark and Share
தமது கோரிக்கைகளுக்கு அடுத்து வரும் ஒருவார காலத்திற்குள் தீர்வுகள் கிடைக்கவில்லையாயின் முழு அளவிலான பணிபகிஸ்கரிப்பை மேற்கொள்ள போவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வை வழங்க இதுவரை எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை இன்றும் (11) முன்னெடுக்க தீர்மானித்தாக அவர் கூறினார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பும் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

இதுவரை தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் கவனம் செலுத்தவில்லை எனவும் எனவே தீர்வு கிடைக்கும் வரை பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க போவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜே.ரிச்மண்ட் தெரிவித்தார்.