Back to Top

சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக அரச சேவைகள் முடக்கம்

சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக அரச சேவைகள் முடக்கம்

September 11, 2019  03:29 pm

Bookmark and Share
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்திற்கு அமைவாக ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போதைய நிலையில் இடம்பெற்று வருகிறது.

அரச நிர்வாக அமைச்சகத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (10) மற்றும் இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ள இரண்டு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் சுமார் 3000 ஆயிரம் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா தெரிவித்தார்.

அரச நிர்வாக அமைச்சுக்கு முன்னால் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தின் போது, அத தெரண செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஓய்வூதிய திணைக்களம் , குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ள வந்த மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணி காரணமாக இன்று முற்பகல் கொழும்பு - கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காலி முகத்திடலுக்கான பிரவேச வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.