Back to Top

எப்படி வந்தாலும் சஜித் தோற்கடிக்கப்படுவார்

எப்படி வந்தாலும் சஜித் தோற்கடிக்கப்படுவார்

September 11, 2019  04:16 pm

Bookmark and Share
அமைச்சர் சஜித் பிரேமதாச எந்த கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினாலும், தேர்தலின் முடிவின் போது அவர் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளராகவே காணப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச எவ்வித தூர நோக்கையும் அற்ற நபர் எனவும், அமைச்சர் அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ள மாத்திரமே அறிவார்ந்த தலைவராக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எமது கட்சிக்கு சாதகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதேவேளை, அதிக திருடர்களை காப்பாற்றியது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவே என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.