Back to Top

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை

September 11, 2019  04:52 pm

Bookmark and Share
வவுனியா பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (11) மதியம் சோதனை ஒன்றை நடத்தியிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலை வளாகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் வார்டு பகுதி, வைத்தியசாலை வளாகத்தின் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்கள் போன்று நோயாளர்களின் பயணப்பொதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என வவுனியா பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் வெடிகுண்டு சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலை வளாகத்தில் சோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வைத்தியசாலையினுள் எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.