Back to Top

உயிரை காக்க நாடு பூராகவும் சென்ற சைக்கிள் சவாரி

உயிரை காக்க நாடு பூராகவும் சென்ற சைக்கிள் சவாரி

September 11, 2019  05:31 pm

Bookmark and Share
இலங்கையின் மனநல மேம்பாடு மற்றும் தற்கொலையை தடுப்பதன் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள 1333 தொலைப்பேசி ஆலோசனை சேவைக்கு நிதி திரட்டும் நோக்குடன் இடம்பெற்ற சைக்கிள் சவாரி நேற்று (10) நிறைவடைந்தது.

13 நாட்களாக நாடு பூராகவும் பல பிரதேசங்களை சென்றடைந்த இந்த சைக்கிள் சவாரி நேற்று (10) கொழும்பினை வந்தடைந்தது.

இலங்கையின் மனநல மேம்பாடு மற்றும் தற்கொலையை தடுப்பதன் நோக்குடன் 1333 தொலைப்பேசி ஆலோசனை சேவை கடந்த 10 வருடங்களாக செயற்படுத்தப்படுகிறது.

இந்த தொலைப்பேசி சேவைக்கு நிதி திரட்டும் நோக்குடன் நடாத்தப்பட்ட இந்த சைக்கிள் சவாரி கடந்த 13 நாட்களாக நாட்டை சுற்றி 1333 கிலோமீற்றர் தூரம் பயணித்திருந்தது.

ஆறாவது தடவையாக இடம்பெற்ற இந்த சைக்கள் சவாரியில் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் 1333 தொலைப்பேசி ஆலோசனை சேவையின் வணிகத் தூதுவரான முன்னாள் ​டெஸ்ட் கிரிக்கட் தலைவர் குமார் சங்கக்கார கலந்து கொண்டிருந்தார்.

உலக தற்கொலை தடுப்பு தினம் நேற்று (10) அனுசரிக்கப்பட்டது.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு வௌியிட்ட அறிக்கையில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.