Back to Top

ஆன்மீக ஆரோக்கிய முகாம் சென்று உயிரிழந்தவரின் சடலம் அடக்கம்

ஆன்மீக ஆரோக்கிய முகாம் சென்று உயிரிழந்தவரின் சடலம் அடக்கம்

September 11, 2019  05:59 pm

Bookmark and Share
அனுராதபுரம் - ஹொரவப்பொத்தானை பகுதியில் ஆன்மீக ஆரோக்கிய முகாம் ஒன்றில் சிகிச்சை பெற சென்று உயிரிழந்த மூவரில் ஒருவரின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

ஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்தும் நபர் ஒருவரால் நடாத்தப்பட்ட முகாம் ஒன்று அனுராதபுரம் ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு நாடு பூராகவும் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதில் கலந்து கொண்ட நோய் முற்றிய நிலையில் இருந்த மூன்று நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 பேர் நோய் நிலைமை காரணமாக ஹொரவப்பொத்தானை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஒருவரின் சடலம் கெகிராவை, இஹலகம பிரதேசத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.