Back to Top

கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர் பெயரிடப்படுவார்

கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர் பெயரிடப்படுவார்

September 11, 2019  06:59 pm

Bookmark and Share
கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கு அமையவே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பெயரிடப்படப் பட ​வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பிரதமருக்கும் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று (10) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அறியக்கிடைத்ததாகவும், தொடர்ந்து குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவித்த அவர், எங்களுக்கு எவ்வித அவசரமும் இல்லை என தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளதாக கடந்த தினம் வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் வழங்கி அவர், பிரதமர் கடந்த 4 வருடங்களாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க போவதாக தெரிவித்து வந்ததாக குறிப்பிட்டார்.

அவர் களமிறங்குவாரா? இல்லையா? என்பது தொடர்பான உறுதியான முடிவு கட்சியின் செயற்குழுவினாலேயே தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க மேலும் தெரிவித்தார்.