Back to Top

ரணில் ஒரு போதும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை

ரணில் ஒரு போதும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை

September 11, 2019  08:58 pm

Bookmark and Share
ரணில் விக்ரமசிங்க ஒரு போதும் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை என ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை போராடியே பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அல்லது பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க தனி நபர் ஒருவருக்கு வேட்பாளர் பதவி வழங்க மாட்டார் எனவும் அவர் மேலும் கூறினார்.