Back to Top

Huawei Nova: பல ஆண்டுகளின் பரிணாமம்

Huawei Nova: பல ஆண்டுகளின் பரிணாமம்

September 17, 2019  03:06 pm

Bookmark and Share
உலகெங்கிலுமுள்ள Huawei வாடிக்கையாளர்களின் பேராதரவினை வென்ற Huawei Nova ஆனது, மத்திய தரத்திலிருந்து உயர் ரகத்திற்கு பரிணாமம் அடையும் ஒரு ஸ்மார்ட்போன் வரிசையாகும். Nova எனப்படும் இந்தப் பெயர், இலத்தீன் மொழியில் புதியது என்று பொருள்படுவதுடன், வானியல் சாஸ்திரத்தில் வெடிக்கும் நட்சத்திரத்தினையும் குறிக்கின்றது.

Nova ஸ்மார்ட்போன் வரிசையானது பல ஆண்டுகளாக இளம் தலைமுறையினரின் மிகவும் நம்பகமான வர்த்தகநாமமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. அதன் முதல் மாடலின் அறிமுகத்தின் போது, ​​மத்திய தர ஸ்மார்ட்போன்களுக்கான தேவை மிக உயர்ந்ததாக காணப்பட்ட போதிலும், காலப்போக்கில் அதில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. உயர்ந்த வடிவமைப்பு மற்றும் ஓரளவு உயர்வான வன்பொருள் அம்சங்களைக் கொண்ட வழக்கமான மத்திய தர ஸ்மார்ட்போன் வரிசையாகவே Huawei Nova அறிமுகமானது. எனினும், Huawei Nova ஆனது இன்றளவில் உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமமாக அதனை நிலைநிறுத்தியுள்ளது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. 100 மில்லியன் உலகளாவிய பயனர்கள் மற்றும் குறிப்பாக இலங்கையில் 150,000 க்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ள Nova வரிசையானது, ஏனைய அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான Huawei Nova 2i பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றது. Nova வரிசையின் முதல் ஸ்மார்ட்போன் என்றவகையில், இரட்டை முகப்புக் கேமரா அமைப்பிலான, ambient flash தொழில்நுட்பத்துடன் கூடிய 13MP மற்றும் 2MP முற்புற கேமராக்களையும், 16MP மற்றும் 2MP பின்புற கேமராக்களையும் கொண்ட Huawei நிறுவனத்தின் முதலாவது நான்கு கேமரா (quad camera) தொகுதியினை Nova 2i மாடலானது கொண்டிருந்தது.

HUAWEI Nova 2i உயர் வலுமிக்க கேமரா வில்லைகள் மற்றும் அதிநவீன கேமரா தொழில்நுட்பமானது bokeh விளைவுடன் தத்ரூபமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு இடமளிக்கின்றது. இந்த அதிநவீன கேமரா தொழில்நுட்பமானது புகைப்படங்களை எடுத்ததன் பின்னர் அவற்றை focus செய்யும் வசதியினையும் வழங்குகிறது. அலுமினிய வேலைப்பாட்டுடனான அற்புதமான வளைவுகளுடன் கூடிய வெளித்தோற்றமானது, பயனரின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிமைமைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் திகதி சர்வதேசளவில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட NOVA 4, புரட்சிகரமான சிறப்பம்சங்களுடன் பண்டிகைக்கால மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியான முதற்கட்ட விமர்சனங்கள் மற்றும் கருத்தாய்வுகளில், NOVA 4 இன் புரட்சிகரமான தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதை அறியமுடிகின்றது.

வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடங்கியுள்ள புரட்சிகரமான கேமெரா தொழில்நுட்பத்துடனான HUAWEI NOVA 4 ஆனது, முன்பக்க சட்டங்களின்றிய (bezel-less) வடிவமைப்பிலான மிகச் சிறிய செஃல்பி கேமெராவினை கொண்டுள்ளதுடன், திரையைப் பொறுத்த வரையில் இதற்கு முன்பு இருந்தவற்றை விடவும் மிகச் சிறிதளவு இடப்பரப்பினையே அது எடுத்துக் கொள்கின்றது. திரை - உடல் மேற்பாகம் இடையிலான 86.3% திரை விகிதமானது, NOVA 4 இன் 25MP கேமெரா மற்றும் AI தொழில்நுட்பப் பெறுபேற்றுத்திறனை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் அமைந்துள்ளது.

பரந்த கோணத்துடன் பின்புறத்தில் மூன்று கேமெராக்களை இச்சாதனம் கொண்டுள்ளமை அதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும். HUAWEI இன் உத்தியோகபூர்வ Weibo கணக்கில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், பரந்த கோணத்தின் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில், 48MP + 16MP + 2MP ஆகிய மூன்று பின்புற கேமெராக்களையும் இணைத்து, 117 பாகை வரை நீட்டப்படக்கூடிய வகையில் புகைப்படங்களை எடுப்பதற்கு இடமளிக்கின்ற ஒரு அதிநவீன புகைப்படவியல் சாதனமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 20MP + 16MP + 2MP ஆகிய மூன்று பின்புற கேமெராக்களைக் கொண்ட இன்னொரு மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Nova 2i இன் அறிமுகத்தினைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை வழங்கும் வகையில் Huawei அதன் Nova 3 மற்றும் Nova 3i மாடல்களை அறிமுகப்படுத்தியது. Huawei இன் வரலாற்றில் முதன்முறையாக, AI தொழில்நுட்பத்துடனான நான்கு கேமராத் தொகுதியானது Nova 3 மற்றும் Nova 3i மாடல்களில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Huawei Nova 3 மற்றும் Huawei Nova 3i மாடல்கள் இரண்டும் இரட்டை முகப்புக் கேமரா அமைப்பிலான 24MP பிரதான மற்றும் 2MP துணை முற்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இதில் பிரதான கேமரா மிகத்தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு உதவும் அதேவேளை, துணைக் கேமரா பொருட்களுக்கிடையிலான தூரத்தினைத் துல்லியமாகக் கணிக்கின்றது. இந்த இரண்டு சென்சார்களும், மனித கண்களுக்கு ஒப்பான பார்வையுடன், பாவனையாளர்களுக்கு தத்ரூபமான தோற்றத்தைத் தரும் படங்களை எடுப்பதற்கு இடமளிக்கின்றன. Huawei Nova 3i புத்தம்புதிய HiSilicon Kirin 710 SoC இன் வலுவூட்டல் மற்றும் 3340mAh பேட்டரியினைக் கொண்டுள்ளதுடன், Huawei Nova 3 மாடலானது HiSilicon Kirin 970 SoC இன் வலுவூட்டல் மற்றும் 3750mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் 19.5:9 விகித வடிவமைப்புடனான திரைகளைக் கொண்டுள்ளன.

HUAWEI Nova 3 இன் பின்புற கேமரா அதன் பிரதான அம்சங்களுள் ஒன்றாக உள்ளதுடன், அனைத்து வெளிச்ச நிலைமைகளிலும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க இடமளிக்கும் 24MP தனி வர்ண (monochrome) கேமரா மற்றும் f/1.8 wide aperture தொழில்நுட்பத்துடனான 16MP RGB சென்சாரினைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இருண்ட அல்லது வெளிச்சம் குறைவான சூழ்நிலைகளிலும் நம்பமுடியாத அளவில் வியப்பூட்டும் புகைப்படங்களை எடுக்க முடிகின்றது. HUAWEI Nova 3i மாடலானது 16MP பிரதான மற்றும் 2MP துணை சென்சார்களைக் கொண்டுள்ளது. இதில் முதலாவது தத்ரூபமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு இடமளிப்பதுடன், இரண்டாவது சென்சார் பொருட்களுக்கிடையிலான தூரத்தினைத் துல்லியமாகக் கணித்து, bokeh விளைவுடன் புகைப்படங்களை தத்ரூபமான தோற்றம் கொண்டவையாக மாறச் செய்கின்றது.

BrandZ இன் 2018 ஆம் ஆண்டிற்கான முதல் 100 ஸ்தானங்களிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 47 ஆவது ஸ்தானத்திலுள்ள HUAWEI, உலகப்புகழ் பெற்ற Forbes சஞ்சிகை மற்றும் Brand Finance Global தரப்படுத்தல்களில் முறையே 79 ஆவது மற்றும் 25 ஆவது ஸ்தானங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, Interbrand இன் 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் தலைசிறந்த சர்வதேச வர்த்தகநாமங்களின் பட்டியலில் 68 ஆவது ஸ்தானத்திலும் Fortune 500 நிறுவனங்கள் பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்திலும் HUAWEI இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.