Back to Top

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 'பிளாஸ்டிக் சக்கரம்'நிகழ்ச்சித் திட்டம் - சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி வரை விரிவு

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 'பிளாஸ்டிக் சக்கரம்'நிகழ்ச்சித் திட்டம் - சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி வரை விரிவு

September 17, 2019  03:15 pm

Bookmark and Share
பிளாஸ்டிக் சக்கர முன்னெடுப்புக்கு புதிய இணைப்பாக சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபையுடன் இணைந்து குறிப்பிடத்தக்களவு மீள்சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்குகள் சேரும் சுகததாச வெளியக தேசிய விளையாட்டு அரங்கில் பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டிகளை வைத்தது.

இது போன்ற பிரபலமான விளையாட்டு அரங்குகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட வெவ்வேறு நிகழ்ச்சிகளின் ஊடாக நாளாந்தம் 2000 மேற்பட்ட நபர்கள் உச்சளவான வருகையாளர்களைக் கொண்டு வருகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டது. ஒவ்வொரு பார்வையாளரும் அல்லது விளையாட்டு வீரரும் அவர்கள் விளையாட்டுஅரங்கில் இருக்கும் போது குறைந்த பட்டசம் 500 மி.லீற்றர் நீரை மீள்சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் போத்தலைப் பயன்படுத்தி நுகர்வதனால் குறிப்பிட்டளவு மீள்சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்குகள் அங்கு சேருகின்றன.

உணவுச் சாலை மற்றும் உள்நுழைவு மற்றும் வெளியேரல் வாயில் போன்ற பிரதான இடங்களில் சுமார் 6000 பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் வகையில் பிளாஸ்டிக் சக்கரம் ஐந்து சேகரிக்கும் தொட்டிகளை வைத்துள்ளது. இலங்கை மீள்சுழற்சியாளர் சங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதன் ஊடாக 25 மெற்றிக் தொன்னிற்கும் மேற்பட்ட மீள்சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்குகளை சேகரிக்க வேண்டியுள்ளதனால் சுகததாச விளையாட்டு அரங்கின் வளாகத்தில் பிளாஸ்டிக்குகளை சேகரிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு நாம் பணியாற்றுவோம்.

´பிளாஸ்டிக் சக்கரம்´ என்பது 7 வேறுபட்ட துறைகளில் 70 ற்கும் மேற்பட்ட கம்பனிகளைக் கொண்டிருக்கும் கொழும்பு பங்குப் பரிவர்த்தணையில் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் பிஎல்சி நிறுவனத்தினால் 2017 ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட சமூக தொழில் முயற்சிக் கருத்திட்டம் ஆகும். கடந்த 13 வருடகாலமாக´ உயரளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்´ எனத் தரப்படுத்தப்பட்ட ஜோன் கீல்ஸ் நிறுவனம் 13000 ற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றது. உலக பொருளாதாரப் பேரவை மற்றும் ஜக்கிய நாடுகளின் உலக ஒப்பந்தத்தில் முழுமையான அங்கத்தவராக இருப்பதுடன் ஜோன் கீல்ஸ் அமைப்பின் ஊடாக ´நாளைய தேசத்தை வலுவூட்டுதல்´ எனும் தொலை நோக்குடன் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொழிற்படுகின்றது.

Most Viewed