Back to Top

அடுக்கு மாடி குடியிருப்பில் தீப்பரவல்

அடுக்கு மாடி குடியிருப்பில் தீப்பரவல்

September 17, 2019  04:04 pm

Bookmark and Share
தெமடகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 71 ஆராமயவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (17) பிற்பகல் 3.00 மணி அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்பின் 5 ஆவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெமடகொட பொலிஸார் தெரிவித்தனர்.

தெமடகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பரவலினால் உயிர் சேதங்கள் எவையும் பதிவாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் தெமடகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.