Back to Top

உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு 100 மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு 100 மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

September 17, 2019  09:23 pm

Bookmark and Share
இந்த முறை உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக குடியிருப்பாளர் தினம் அக்டோபர் முதலாதம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Most Viewed