Back to Top

வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில்

வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில்

September 18, 2019  08:49 am

Bookmark and Share
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் (18) 24 மணித்தியால சுழற்சி முறையிலான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள் இதனை தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரவை முடிவுகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

Most Viewed