Back to Top

பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றி

பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றி

October 1, 2019  07:01 am

Bookmark and Share
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஸாம் 115 ஓட்டங்களையும் பக்ஹர் ஷமான் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 306 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.5 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் செஹான் ஜயசூரிய 96 ஓட்டங்களையும், தசுன் சானக 68 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

செஹான் மற்றும் தசுன் சானக இலங்கை அணி சார்பில் 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் உஷ்மான் சின்வாரி 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed