Back to Top

6 முதியவர்களின் பற்களை பிடுங்கிய கொடூரம் - 22 பெண்கள் கைது

6 முதியவர்களின் பற்களை பிடுங்கிய கொடூரம் - 22 பெண்கள் கைது

October 3, 2019  12:05 pm

Bookmark and Share
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டம் கோபாபூர் கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் 3 பெண்கள் திடீரென இறந்தனர். மேலும் 7 பேர் உடல்நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.

கிராமத்தில் திடீரென்று உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு சிலர் தங்கள் கிராமத்துக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதுதான் காரணம் என்று கருதினர்.

இதில் அக்கிராமத்தில் வசிக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட 6 முதியவர்கள் மீது கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தான் மாந்திரீகம் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக கூட்டம் நடத்திய கிராம மக்கள், 6 முதியவர்களின் பற்களை பிடுங்க முடிவு செய்தனர்.

இதையடுத்து பெண்கள் உள்பட கிராம மக்கள் 6 முதியவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை அங்கிருந்து வெளியே இழுத்து வந்தனர். 6 பேரையும் பெண்கள் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் கற்கள் மற்றும் இடுக்கியால் அவர்களது வாய்களில் தாக்கி பற்களை கொடூரமாக பிடுங்கினர். இதனால் 6 பேரும் வலியால் அலறி துடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிராம மக்களிடம் இருந்து 6 முதியவர்களையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 22 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Most Viewed