Back to Top

Ad

தென்மராட்சி  வாள் வெட்டுக் குழு அட்டகாசம்

தென்மராட்சி வாள் வெட்டுக் குழு அட்டகாசம்

October 4, 2019  01:52 pm

Bookmark and Share
தென்மராட்சி, மட்டுவில், சந்திரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து வாள் வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

குறித்த வீட்டில் இன்று (04) அதிகாலை நுழைந்த 4 பேர் அடங்கிய குழு, வீட்டின் கேட் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளது.

இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக் குரல் எழுப்பியதனை அடுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவுக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)