Back to Top

 விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

October 5, 2019  08:40 am

Bookmark and Share
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 3 வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். 2 வது விக்கெட்டாக டீன் எல்கரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 வது விக்கெட்டை பதிவு செய்தார்.

ஜடேஜாவுக்கு இது 44 வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், 2 வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அஸ்வின் 37 டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

Most Viewed