Back to Top

வலையில் சிக்கிய சிறுத்தை புலி

வலையில் சிக்கிய சிறுத்தை புலி

October 5, 2019  02:57 pm

Bookmark and Share
கொத்மலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொத்மலை, தொராகல, தவட்டகல பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள வனப்பகுதியில் வலையில் சிக்குண்டு காணப்பட்ட சிறுத்தை புலி ஒன்றை ரந்தெனிகல வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (05) காலை வேலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த பகுதியில் வேட்டையர்களினால் விரிக்கபட்ட வலையில் சிக்குண்டு காணப்பட்ட சிறுத்தை புலியினை இனங்கண்ட பொதுமக்கள் கொத்மலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ரந்தெனிகல வனவிலங்க காரியாலத்திற்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மிருக வைத்தியரின் உதவியோடு குறித்த சிறுத்தை புலிக்கு மயக்க ஊசி ஏற்றி காப்பாற்றியுள்ளனர்.

சிறுத்தை புலி நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறித்த சிறுத்தைபுலிக்கு சிகிச்சை வழங்கபட்டு வேறு வனபகுதிக்கு கொண்டு செல்லவிட இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed