Back to Top

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

October 7, 2019  11:00 am

Bookmark and Share
தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் நேற்று (6) இரவு 8:30 மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் அட்டப்பளம் பிரதேசத்தில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த நிந்தவூரை சேர்ந்த 35 வயதுடைய நபரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இறந்தவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(அம்பாறை நிருபர் ஷிஹான்)

Most Viewed