Back to Top

வருத்தத்திற்குரிய விடயம் தொடர்பில் வௌிப்படுத்திய நாமல்

வருத்தத்திற்குரிய விடயம் தொடர்பில் வௌிப்படுத்திய நாமல்

October 9, 2019  01:30 pm

Bookmark and Share
ராஜபக்ஷ ஆட்சியின் போது அபிவிருத்தி திட்டங்களை விமர்சித்த தரப்பினர் வடக்கின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற தயாராவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை அக்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், விவசாய நிலமாக இருந்து இந்த நாடு கடந்த 5 வருடங்களில் தரிசு நிலமாக மாறியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் கொள்ளையர்களுக்கு விற்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் மத்தல விமான நிலையம் சரியில்லை என்று கூறினார்கள் . அது ஏன் தெரியுமா? மஹிந்த ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்டதால் அதனை சரியில்லை என்றார்கள். இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒன்று நாட்டுக்கு தேவையில்லை என கூறிய தரப்பினர். தற்போது பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பெயரிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச விமான நிலையம் ஒன்றை வழங்க வேண்டாம் என்று கூறவில்லை. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் பாதைகள் மற்றும் அதிவேக சாலைகளை அமைத்து அதனூடாக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடைகளை நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்கும் கொண்டு சென்று சர்வதேசத்திற்கு அனுப்பி வைக்க முடியும். எங்களுக்கு திட்டம் ஒன்று இருந்தது.

வருத்தத்திற்குரிய விடயம் அதுவல்ல. நாட்டிற்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒன்று தேவையில்லை என கூறிய ஐக்கிய தேசிய கட்சி தற்போது வடக்கின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பெயரிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Most Viewed