Back to Top

மனைவியையும் மகளையும் காப்பாற்ற சென்ற நபர்  ரயிலில் மோதி  பலி

மனைவியையும் மகளையும் காப்பாற்ற சென்ற நபர் ரயிலில் மோதி பலி

October 9, 2019  02:16 pm

Bookmark and Share
திருகோணமலை - மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (09) உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியையும் மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை - அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என். ஜோஹான் ஜோசப் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(திருகோணமலை நிருபர் பாருக்)

Most Viewed