Back to Top

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய ஆசிரியை சடலமாக மீட்பு

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய ஆசிரியை சடலமாக மீட்பு

October 9, 2019  03:44 pm

Bookmark and Share
காணாமல் போயிருந்த கம்பளை பாடசாலையின் ஆசிரியையின் சடலம் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை கீரபனே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நிசங்சலா ரத்னாயக்க எனும் ஹட்டன் ஶ்ரீபாத வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை கடந்த 1 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் சந்தர்பத்தில் காணாமல் போயிருந்தார்.

வீட்டில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் குறித்த ஆசிரியை வீட்டிற்கு வருவது பதிவாகி இருந்தாலும் மாலையாகியும் அவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் குறித்த ஆசிரியையின் சடலம் கண்டி, ஹாரமக பகுதியில் விக்டோரிய நீர்தேக்கத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் இன்று குறித்த ஆசிரியையின் சடலம் பெற்றோர்களினால் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.