Back to Top

My First Vote மற்றும் தேர்தல் ஆணையகத்துடன் இணைந்து இளைஞர்களின் முதலாவது வாக்கை செலுத்த Facebook ஊக்குவிப்பு

My First Vote மற்றும் தேர்தல் ஆணையகத்துடன் இணைந்து இளைஞர்களின் முதலாவது வாக்கை செலுத்த Facebook ஊக்குவிப்பு

October 9, 2019  04:59 pm

Bookmark and Share
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களுக்கான முதலாவது வாக்களிப்பு தொடர்பான மாநாட்டுக்கு Facebook அனுசரணை வழங்கியிருந்தது. இந்த மாநாட்டின் போது தேர்தல்கள் ஆணையகம் மற்றும் ‘My First Vote’ உடன் இணைந்து நாட்டில் எதிர்வரும் காலப்பகுதியில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு Facebook உணர்த்தியிருந்தது.

தேர்தல் காலப்பகுதியில் இளைஞர்களுக்கு முக்கியமான விடயங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் ஒரு பக்கத்திலமைந்த வினாக்கோவை ஒன்றையும் நிகழ்ச்சி பங்காளர்கள் உருவாக்கியிருந்தனர். இது பங்குபற்றுநர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டதுடன், அவற்றை பூர்த்தி செய்து, வாக்களிப்பு பெட்டியினுள் அவற்றை இடுமாறு அவர்களுக்கு பணிக்கப்பட்டிருந்தது. தேர்தல் காலப்பகுதியில் பயன்படுத்தப்படும் வாக்களிப்பு பெட்டிகளைப் போன்ற பெட்டிகளை தேர்தல்கள் ஆணையகம் இதற்காக வழங்கியிருந்தது. தேர்தல்களின் போது வாக்களிப்பின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்தியிருந்ததுடன், நாட்டின் இளைஞர்கள் முக்கியமாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தது. இந்த அமர்வின் போது, தேர்தல் காலப்பகுதியில் இளைஞர்களின் பங்கு மற்றும் பொறுப்பை குறிப்பிடும் வீடியோ ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. இதனூடாக இந்நடவடிக்கையில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டு, ஏனையவர்களுடன் முரண்படாமல் மற்றும் ஏனையவர்களை தளர்வடையச் செய்யாமல், தகவல்சார் தீர்மானத்தை மேற்கொள்வது பற்றிய விடயங்கள் வழங்கப்பட்டிருந்தன.

தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இளைஞர்களுக்கான வாக்களிப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு உரையை ஆற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து, Facebook இன் Policy Programs, (India, South Asia and Central Asia) தலைமை அதிகாரி ஷெல்லி தாக்ரல் தமது உரையின் போது இலங்கைக்கான Facebook இன் அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தார்.

Facebook தெற்காசியாவின் தேர்தல் கொள்கைகள் அதிகாரி நடாஷா ஜொக் உரையாற்றியிருந்தார். இதன் போது இலங்கையில் எதிர்வரும் தேர்தல் காலப்பகுதியில் ஜனநாயகத்துக்கான பெறுமதிமிக்க உந்துசக்கியாக Facebook விளங்கிடும் என்பதுடன் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவித்தல், வாக்காளர்களுக்கு அவர்களது வேட்பாளர்களுக்கான நேரடியான அணுகலை அதிகம் ஏற்படுத்திக் கொடுத்தல், அரசியல் செயன்முறைகளில் மக்களுக்கு குரல் கொடுக்க சந்தர்ப்பம் அளித்தல் போன்றவற்றில் Facebook நம்பிக்கை வைத்துள்ளது என்றும் அதனாலேயே Facebook இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளின் தளத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ICTA இன் தலைமை அதிகாரி பேராசிரியர். ரொஹான் சமரஜீவ தமது அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் தேர்தலில் இளைஞர்களை ஈடுபாடு மற்றும் இளைஞர்களின் சமூக ஊடகங்களின் செயற்பாடு போன்றன தொடர்பில் விளக்கமளித்திருந்தார். இந்த நிகழ்வில் இடம்பெற்ற குழுநிலை கலந்துரையாடலின் முக்கிய அங்கமாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய, தேர்தலில் இளைஞர்களின் முக்கியத்துவம் குறித்து பேசியிருந்ததுடன், தகைமை வாய்ந்த அனைத்து வாக்காளர்களையும் தமது வாக்குகளை பதிவு செய்யுமாறு அழைத்திருந்தார்.

Facebook இன் இலங்கைக்கான கொள்கை நிகழ்ச்சிகள் முகாமையாளர் யசஸ் அபேவிக்ரம குறிப்பிடுகையில், Facebook இல் தேர்தல்களின் நடுநிலைத்தன்மை தொடர்பில் நிறுவனம் அதிகளவு கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். இலங்கையில் டிஜிட்டல் அறிவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை இலங்கையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் Facebook கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பான வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி 20000 பாடசாலை மாணவர்களுக்கு விளக்கும் நடவடிக்கை மற்றும் அடிமட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தமை தொடர்பில் குறிப்பிட்டார். அரச நிறுவனங்கள், சிவில் சமூகங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘My First Vote’ இன் புஷ்பகுமார சமரவிக்ரம குறிப்பிடுகையில், தகவல் அறிந்த சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இளைஞர்கள் எதிர்வரும் தேர்தல்களில் பங்கேற்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரபலங்கள் வெளியிட்டிருந்த முக்கியமான கருத்துக்களை கீழே காணலாம். முன்னாள் கிரிக்கெட் வீரரான ரொஷான் மஹாநாம தமது விளையாட்டு அனுபவத்தைக் கொண்டு, தேர்தலின் போது ஒழுக்கத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி தெரிவித்திருந்தார்.

நாலக சேனாதீர, கைவிடப்பட்ட விளை நிலைங்களை மீண்டும் பயிர்செய்கைக்கு பயன்படுத்த Facebook ஊடாக தாம் வழங்கி வரும் ஊக்குவிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நதீஷ சந்திரசேன சமூக ஊடகங்களின் பயன்பாடு பற்றி கருத்துரைத்திருந்தார்.

எழுத்தாளரான சரண்யா சேகரம், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டிருந்ததுடன், சமூக ஊடகங்களினூடாக மாற்றத்துக்கு எவ்வாறு வழிகோல முடியும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆஸ்சர்யா ஜெயக்கொடி தாக்கத்திலிருந்து வெளிவருவது மற்றும் நேர்த்தியான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

‘My First Vote’ இன் வீடியோ பாடல் இந்நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததுடன், ‘My First Vote’ இன் Facebook பக்கமான https://www.facebook.com/myfirstvotesrilanka/ ஊடாக நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Most Viewed