Back to Top

Ad

இலங்கையில் நவநாகரிகத்துறையில் உள்நாட்டு திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் Singer Fashion Academy செயற்பட்டு வருகின்றது

இலங்கையில் நவநாகரிகத்துறையில் உள்நாட்டு திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் Singer Fashion Academy செயற்பட்டு வருகின்றது

October 9, 2019  06:37 pm

Bookmark and Share
உலகளாவிய நவநாகரிகத் தொழிற்துறை தற்போது பெருமளவில் பிரபலமடைந்து வருவதுடன், புரட்சிகரமான மாற்றங்களுடனான தற்போதைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், உலகளாவில் கிட்டத்தட்ட ஒரு வழக்கமான தராதரமாக மாறிவருவதை எம்மால் காணக்கூடியதாகவும் உள்ளது.

ஏராளமான புத்தாக்கமான படைப்பாக்கத்திறனை வெளிக்கொணர்ந்து, உலகெங்கிலும் அதிக எண்ணிக்கையில் திறமைசாலிகளுக்கு வாய்ப்புக்களுக்கு வழிகோலுகின்ற ஒரு தொழிற்துறை என்பதில் எவ்விதமான ஐயங்களும் கிடையாது. உலகளாவிய கோணத்தில் நவநாகரிகத் தொழிற்துறையை எடுத்து நோக்கும் போது, நவநாகரிக சந்தையின் பெறுமதி 3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% இனை பிரதிநிதித்துவம் செய்கின்றது. பெண்களுக்கான நவநாகரிகமானது உலகளாவில் முன்னிலை வகிக்கின்ற நவநாகரிகமாகக் காணப்படுவதுடன், அதன் துறைசார் பெறுமானம் மட்டும் 621 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையாக பதிவாக்கப்பட்டுள்ளது. முறையே ஆண்களுக்கானவை, ஆடம்பர ஆடையணி மற்றும் சிறுவர்களுக்கான நவநாகரிகம் ஆகியவற்றின் பெறுமானங்கள் அதனைத் தொடர்ந்தே காணப்படுகின்றன.

நவநாகரிகத் தொழிற்துறையானது மிகவும் பரந்ததும், துடிப்பானதும் என்பதுடன், முழுமையாக வாய்ப்புக்கள் நிரம்பியவையாகவும் காணப்படுவதுடன், படைப்பாக்கத்திறன் மற்றும் திறமை ஆகியவற்றை நிலையான வளர்ச்சியின் சாம்ராஜ்யத்திற்கு இட்டுச் செல்கின்றது. மனிதப்பிறவிகள் ஆடைகளை அணியும் பழக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன், சமூக ஊடகம் மற்றும் செல்வாக்குச் செலுத்துகின்றவரின் மூலமாக சந்தைப்படுத்தல் போன்ற மார்க்கங்களின் ஊடுருவலின் பலனாக நவீன போக்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக இடம்பிடிக்கின்றன. தினசரி மனித வாழ்வில் அவை தொடர்ந்தும் பரவி வருகின்றன.

உலகளாவில் பிரசித்தி பெற்ற பல்வேறு சர்வதேச வர்த்தகநாமங்களுக்கு ஆடை உற்பத்தியை வழங்குவதில் நம்பிக்கைக்கு பெயர்போன நாடு என்ற அந்தஸ்தை இலங்கை ஏற்கனவே சம்பாதித்துள்ள நிலையில், ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்படுகின்ற நவநாகரிக வர்த்தகநாமங்களின் உலகினைப் பொறுத்தவரையில் இந்த நாடு சமீபத்திலேயே காலடியெடுத்து வைத்துள்ளது. நவநாகரிகத்தின் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும், உரிய முறையிலும் நிலைபெற்றிருப்பது மிக முக்கியமாக காணப்படுவதுடன், படைப்பாக்கத்திறனை தரப்பண்புடன் முன்னெடுக்கின்ற இளைஞர்,யுவதிகளை தெளிவுபடுத்தி, நவநாகரிகத் துறையில் அவர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதும் முக்கியமாகும்.

உதாரணத்திற்கு உலகில் பிரதான மாநகரங்கள் அனைத்தும் தொழிற்துறையில் தமக்குச் சொந்தமான நவநாகரிக இலக்கு தொடர்பான உணர்வை ஏற்படுத்துவதுடன், சுற்றுலாப் பிரயாணிகள் மற்றும் நவநாகரிகத்தில் அக்கறை கொண்டுள்ள மக்களின் வருகையை ஈர்ப்பதுடன், தமது இதயத்தில் குடிகொண்டுள்ள அத்தகைய நவநாகரிக உற்பத்திகளைக் கொண்டுள்ள விற்பனை மையங்கள் மற்றும் காட்சியறைகளுக்குச் செல்வதற்கும் தூண்டுகின்றன. நியூயோர்க் மாநகரத்தில் நவநாகரிகத் தொழிற்துறை மாத்திரம் 98 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வரி வருமானத்தையும் உற்பத்தி செய்ய உதவுகின்றது.

நியூயோர்க் நவநாகரிக தொழிற்துறை மாத்திரம் இத்தொழிற்துறையில் 180,000 ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், 10.9 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை அவர்களுக்கு சம்பளமாக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. நவநாகரிகத் தொழிற்துறையில் கவனம் செலுத்தியுள்ள ஏனைய நகரங்கள் மற்றும் நாடுகளிலுள்ள வர்த்தகநாமங்களை நாம் கருத்தில் கொள்ளும் போது, 900 இற்கும் மேற்பட்ட நவநாகரிக நிறுவனங்கள் தமது தலைமையகத்தை நியூயோர்க் மாநகரில் கொண்டுள்ளமையை எம்மால் அறிந்து கொள்ள முடியும்.

நவநாகரிகத் துறையில் கால்பதிக்க வாய்ப்புள்ள மாணவர்களுக்கான அத்திவாரத்தை Singer Fashion Academy அமைத்துத் தருகின்றது
இத்தொழிற்துறையானது எப்போதும் வளர்ச்சி கண்டு வருவதுடன், இத்தொழிற்துறையில் முற்போக்கான வளர்ச்சி ஏற்படும் போது அவர்கள் அந்த நீரோட்டத்துடன் கலந்து நிலைமையின் அனுகூலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மக்கள் விளங்கி, கற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கையிலும் நவநாகரிகத் துறையில் கால்பதித்துள்ள பல மாணவர்கள் நவநாகரிகத் துறையில் தொழில் முயற்சி கொண்டவர்களாக மாற வேண்டும் என்ற ஆவலைக் கொண்டுள்ளனர். Singer Fashion Academy போன்ற கற்கைநிலையங்கள் அத்தகையவர்களுக்கே உதவுகின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்ற பெருமதிப்பு ஒரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற இந்த கற்கைநிலையம், மாணவர்கள் தம்முள்ளே உள்ள திறமைகளை இனங்கண்டு அவற்றை வெளிக்கொணருவதற்கு சந்தர்ப்பமளித்து, இத்தொழிற்துறையில் தமது எதிர்கால அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களின் தேவைப்பாடுகளை சிறப்பாக புரிந்து கொண்டுள்ளது. எனினும் அவர்களுடைய இலக்கு நவநாகரிகத் துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.

அவர்கள் வழங்கும் பல்வேறுபட்ட குறுகிய கால கற்கைநெறிகள் மற்றும் டிப்ளோமா கற்கைநெறிகள் மூலமாக சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் போன்ற ஏனைய தொழிற்துறைகளுக்கும் பொருத்தமான பல்வேறுபட்ட மட்டத்திலான படைப்பாக்கத்திறன் பேணப்படுவதை உறுதி செய்துள்ளனர். உதாரணத்திற்கு உட்புற வடிவமைப்பு அலங்கார சான்றிதழ் கற்கைநெறியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பினைக் கொண்டுள்ள மாணவர் ஒருவருக்கு, விருந்தோம்பல் துறையில் வாய்ப்புக்களுக்கான உத்தரவாதம் உள்ளதுடன், சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஹோட்டல் மற்றும் உல்லாச விடுதி தொடர் சங்கிலி மற்றும் சிறு அளவிலான ஹோட்டல்களுக்குக் கூட உட்புற வடிவமைப்பு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளமையால் படைப்பாக்கத்திறனைப் பொறுத்தவரையில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

20 இற்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட கற்கைநெறிகளை Singer Fashion Academy வழங்குவதுடன், அவற்றுள் 03 டிப்ளோமா கற்கைநெறிகள், 08 சான்றிதழ் கற்கைநெறிகள் மற்றும் 11 குறுகிய கால கற்கைநெறிகள் உள்ளடங்கியுள்ளன. மிகவும் கட்டுபடியாகும் கட்டணத்துடன் பட்டப்படிப்பிற்கு வழிகோலுகின்ற புதிய நவநாகரிக வடிவமைப்பு கற்கைநெறியொன்றையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். நாடளாவியரீதியில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த 62 இடங்களில் அவர்களுடைய கற்கைநெறிகள் கிடைக்கப்பெறுவதுடன், நாடெங்கிலும் மாணவர்கள் சௌகரியத்துடன் தாங்கள் விரும்புகின்ற கற்கைநெறியை தெரிவு செய்து கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கின்றது. இக்கற்கைநெறிகளில் கல்விசார் மற்றும் தொழிற்துறை அடிப்படையிலான அறிவை உள்ளடக்கியுள்ளமை அவர்கள் வழங்குகின்ற கற்கைநெறிகளின் சிறப்பம்சமாகும்.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள Chartered Society of Designers (CSD) இடமிருந்து கற்கைநெறிக்கான அங்கீகார அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட நாட்டிலுள்ள முதலாவதும் ஒரேயொன்றுமான கற்கைநிலையம் என்ற அந்தஸ்தும் அண்மையில் இதற்கு கிடைக்கப்பெற்றிருந்தது. Certificate in Fashion Design, Certificate in Scientific Dressmaking, Certificate in Machine Embroidery, Certificate in Saree Jacket, Diploma in Scientific Dressmaking மற்றும் Diploma in Machine Embroidery ஆகிய கற்கைநெறிகளுக்கு CSD அங்கீகார அந்தஸ்து கிடைத்துள்ளமையானது அவை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் வழிகோலியுள்ளது. ஆகவே, இக்கற்கைநெறிகளை பின்தொடரும் எந்த மாணவர்களுக்கும் Singer Fashion Academy இடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற சான்றிதழுக்குப் புறம்பாக, The Chartered Society of Designers (UK) இடமிருந்தும் சான்றிதழ் தானாகவே கிடைக்கப்பெறும். இத்தகைய சான்று அங்கீகாரங்கள் மாணவர்களுக்கு உலகளாவில் நவநாகரிகத் துறைகளில் கால்பதிப்பதற்கு பேருதவியாக அமையும்.

நவநாகரிக வடிவமைப்பாளர்களுக்கான தேவை உள்ளமையை அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே வெளிக்காண்பித்துள்ளதுடன், இத்துறையில் வேலைவாய்ப்புக்களை நிரப்புவதற்கு மக்கள் தேவைப்படுகின்றமையால், மேற்குறிப்பிட்டவாறு அதிநவீன போக்குகளின் அனுபவத்தைப் பெற்று, புத்தம்புதிய சிந்தனைகள் மற்றும் படைப்பாக்க திறமைகளை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது இத்துறையில் மட்டும் பல்வேறு தொழில்களுக்கு பகிரங்கமான கேள்வி நிலவுகின்றது. Apparel Production Assistant, Assistant Fashion Designer, Assistant அல்லது Senior Patternmaker மற்றும் Small Custom Clothing Business Manager போன்ற பல்வேறு பதவிநிலைகளுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. இத்தொழிற்துறையில் விசாலமான அறிவைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு உயர் கல்வியை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஆராய்ச்சிக்கான வாய்ப்புக்களும் உள்ளன. இது புலம்பெயருவதற்கு சிறந்த வாய்ப்பினை அளிப்பதுடன், விண்ணப்பதாரியின் புலம்பெயர்வு நடைமுறைக்கு Singer Fashion Academy ஆனது பெறுமதி சேர் பங்களிப்பாக அமைந்துள்ளது.

இலங்கையில் ஆடைத் தொழிற்துறையில் அனுபவம் வாய்ந்த ஆளணி பாரிய அளவில் தேவையாக உள்ளமையையும் Singer Fashion Academy கருத்தில் கொண்டுள்ளது. இத்தேவையை கருத்தில் கொண்டு, உதாரணத்திற்கு இயந்திர இயக்குனர்கள் (Machine Operators) போன்ற பணிகளில் திறன்மிக்க பணியாளர்களைக் கொண்ட ஆளணியை இணைத்துக் கொள்ள சிங்கர் மக்களுக்கு உதவி வருகின்றது. பெயரளவில் இந்த பணிநிலைகள் கவர்ச்சியானதாக தோன்றாவிட்டாலும், இத்தகைய பணிநிலைகளுக்கான வாய்ப்புக்களும், தொழில் அனுபவங்களும் மகத்தான அளவிலும், விசாலமான மட்டத்திலும் காணப்படுகின்றன. இவற்றை விட, தொழிற்துறையில் dressmaking, patternmaking போன்ற ஏனைய பல்வேறு பிரிவுகளில் மக்கள் கால்பதிக்கவும் இந்த கற்கைநிலையம் மக்களுக்கு உதவுகின்றது.

இத்தகைய பணிநிலைகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மறைமுகமாக உதவுவதுடன், மக்கள் தமக்கு தேவைப்படுகின்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்து, இத்துறையில் பாரிய கேள்வி நிலவுகின்ற அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்வதை கருத்தில் கொள்ளவும் செய்கின்றது.

உலகளாவில் இத்தொழிற்துறையின் தேவைப்பாடுகளின் அடிப்படையில் தனது கற்கைநெறிகளின் பாட விதானத்தை Singer Fashion Academy தொடர்ந்தும் புதுப்பித்து, மீள்வடிவமைத்து வருவதுடன், மாற்றமடையும் போக்குகளுக்கேற்ப கற்கை நெறிகளையும் விஸ்தரித்து வருகின்றது. சிங்கர் போன்று சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற, நம்பிக்கையான நிறுவனம் ஒன்றிடமிருந்து சான்றிதழ் அல்லது டிப்ளோமா தகைமையைப் பெற்றுக்கொள்கின்றமை, குறிப்பாக சர்வதேச தொழிற்சந்தையில் கால்பதிக்க விரும்புகின்ற இலங்கையின் நவநாகரிகத் துறை மாணவர்கள் சிறப்பாக தமது எதிர்காலத்தை முன்னெடுப்பதை உறுதி செய்கின்றது.