Back to Top

சுசுகி வாகனங்களுக்காக விஷேட லீசிங்சலுகைகளை அறிவித்துள்ள கொமர்ஷல் வங்கியும் AMW நிறுவனமும்

சுசுகி வாகனங்களுக்காக விஷேட லீசிங்சலுகைகளை அறிவித்துள்ள கொமர்ஷல் வங்கியும் AMW நிறுவனமும்

October 9, 2019  07:00 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியும் அஸோஸியேட்டட் மோட்டர்வேய்ஸ் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனமும் (AMW) இணைந்து சுசுகி வாகனங்களுக்காக 375,000 வரையிலான கண்கவர் கழிவு உட்பட இன்னும் பல விஷேட லீசிங் சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்த விஷேட ஊக்குவிப்புக் காலம் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். கொமர்ஷல் வங்கியின் லீசிங் கட்டணமானது ஒரு லட்சம் ரூபாவுக்கு மிகக் குறைந்த தொகையான 1,906/- வில் ஆரம்பிக்கின்றது. வர்த்தக ரீதியான வாகனப் பரிமாற்றத்துக்கு அல்லது தங்களது வாகனங்களைத் தரம் உயர்த்திக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கும் தற்போதுள்ள லீசிங் வசதியின் தொடராக இந்த குத்தகை சலுகை செல்லுபடியாகும் என வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட வருமானத்துக்கு இசைவாக மீளச் செலுத்தக் கூடிய திட்டம் ஒன்றையும் வங்கி நடைமுறைபடுத்தும். AMW இன் வாகனத் தெரிவு இடம்பெறும் காட்சியறைகள் அமைந்துள்ள பகுதிகளில் சோதனை ஓட்டத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது விருப்புக்குரிய சுசுகி வாகனத் தெரிவுகளை கொள்வனவு செய்ய முன்பே அவற்றை செலுத்திப் பார்த்து மகிழ்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

AMW நிறுவனம் 1949 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். நாட்டின் டயர்விற்பனைத் துறையில் முன்னோடியான இந்நிறுவனம் இன்று நாட்டின் மிகவும் கௌரவத்துக்குரிய வாகன விற்பனை நிறுவனமாகவும் பயணிகள் கார்கள், டிரக்குகள், பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என பல்வேறு வாகனப் பரிவுகளில் உலகப் புகழ் பெற்ற வர்த்தக முத்திரைகளைக் கொண்ட வாகனங்களை விற்பனை செய்யும் கீர்த்தி மிக்க ஒரு நிறுவனமாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. 1992ல் சுசுகி மாறுதி மற்றும் 2005ல் சுசுகி வாகனங்களுக்கான நாட்டின் ஏகபோக விநியோக உரிமையை கம்பனி பெற்றுக் கொண்டது. 2004 முதல் நாட்டில் 1000 cc வாகன சந்தைப் பிரிவில் சுசுகி முன்னணியில் திகழ்கின்றது. வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் சகல பகுதிகளையும் உள்ளடக்கியகிளை வலையமைப்பையும் அது கொண்டுள்ளது. 2013ல் சுசுகி அல்டோ உலகில் ஆகக் கூடுதலாக விற்பனையான சிறியரக காருக்கான பூகோள விருதை வென்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து ஒன்பது வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 267 கிளைகளுடனும், 854 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டுகாலப் பகுதியில் பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ல் மட்டும் 40 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது. கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கிதிறந்துள்ளது.

Most Viewed