Back to Top

IIT ஏற்பாடு செய்த வருடாந்த பட்டமளிப்பு விழா 2019 நிகழ்வில் தலைசிறந்த சேவையை வழங்குவதில் 30 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடியுள்ளது

IIT ஏற்பாடு செய்த வருடாந்த பட்டமளிப்பு விழா 2019 நிகழ்வில் தலைசிறந்த சேவையை வழங்குவதில் 30 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடியுள்ளது

October 9, 2019  07:28 pm

Bookmark and Share
பிரித்தானிய உயர் கல்வியை இலங்கையில் வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டின் உயர்ந்த ஸ்தானத்திலுள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக கற்கை நிலையமாகவும் திகழ்ந்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), அண்மையில் BMICH மண்டபத்தில் தனது வருடாந்த பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்ததுடன், அதற்கு இணையாக 30 ஆவது ஆண்டு பூர்த்தியையும் கொண்டாடியுள்ளது. Dr. Peter Bonfield - Vice-Chancellor and President of the University of Westminster (UOW) அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster பல்கலைக்கழகத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறையில் வழங்கப்படுகின்ற சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப்படிப்பு பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் Master of Science in Advanced Software Engineering, Bachelor of Engineering (Hons) in Software Engineering, Bachelor of Science (Hons) in Computer Science. Bachelor of Science (Hons) in Business Information Systems மற்றும் BA (Hons) Business Management பட்டப்படிப்புக்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

University of Westminster (UOW) இன் Vice-Chancellor மற்றும் President ஆன Dr. Peter Bonfield Deputy Vice Chancellor (Global) ஆன Prof. Alex Hughes, Associate Head (External Relations) ஆன Prof. Stephen Brookhouse மற்றும் University of Westminster இன் ஏனைய பல கல்வியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், IIT பணியாளர்கள் மற்றும் பெற்றோரும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

Informatics Institute of Technology இன் ஸ்தாபகரான Dr. Gamini Wickramasinghe அவர்கள் கருத்து வெளியிடுகையில், ´IIT கற்கைநிறுவனத்தில் கற்கும் காலத்தில் மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ள எமது மாணவர்களையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். கோட்பாட்டு அறிவை வழங்குவதற்கும் அப்பாற் சென்று, நிஜ உலகின் நேரடி அனுபவத்தை IIT தனது மாணவர்களுக்கு வழங்குவதுடன், மகத்தான தொழில் வாழ்வில் அவர்கள் காலடியெடுத்து வைக்க வழிகாட்டுகின்றது. எமது மாணவர்களுக்கு மிகச் சிறந்த நடைமுறைகள் மற்றும் ஏற்பாடுகளுடன் தலைசிறந்த கல்வியை வழங்கும் எமது முயற்சியில் 30 ஆண்டுகள் நிறைவை Informatics Institute of Technology கொண்டாடுகின்றது. எமது நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் அனைத்து ஊழியர்களினதும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியனவே எமது வெற்றிக்கான அத்திவாரம். நாம் வழங்கும் சேவைகள் மற்றும் எமது மாணவர்களுக்கு நாம் வழங்கும் கற்கைநெறிகள் ஆகியவற்றின் தரத்தினை உயர் மட்டத்தில் நாம் தொடர்ந்தும் பேணி, அவற்றை மேம்படுத்துவோம்,´ என்று குறிப்பிட்டார்.

IIT இல் கல்வியைக் கற்ற சமயத்தில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஏராளமான விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன. Ishanka Lakshan Wasalage - M.Sc. in Advanced Software Engineering, Nagarajah Thiloshon - B. Eng. (Hons) Software Engineering, Christine Laurie Melissa Diaz - BSc (Hons) Computer Science and Sudhara Vinodi Karagampitiya - B.Sc. (Hons) Business Information Systems ஆகியோர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். Brion Mario Piumal Silva - B. Eng. (Hons) Software Engineering, Nethmi Venu Jayawardena- B.Sc. (Hons) Computer Science மற்றும் Sukith Charutha Atulugama - B.Sc. (Hons) Business Information Systems ஆகியோர் University of Westminster விருதைப் பெற்றுக்கொண்டனர். மேலும், இறுதியாண்டுக்கான மிகச் சிறந்த செயற்திட்டத்திற்கான விருதை Nagarajah Thiloshon - B. Eng (Hons) Software Engineering, Nuwan Stanislaus Gomis Abeysingha Jayawardene மற்றும் Sudhara Vinodi Karagampitiya - B.Sc. (Hons) Business Information Systems ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் வலுவாக தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு தூணாக IIT திகழ்ந்து வருவதுடன், தலைசிறந்த உயர் கல்வியை வழங்குவதில் 30 ஆண்டுகள் பூர்த்தியையும் கொண்டாடியுள்ளது. இத்தொழிற்துறையிலும், அதற்கு வெளியேயும் உலகளாவில் 3,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை தொழிற்துறையில் கொண்டுள்ளமை IIT இன் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு. தொடர்ந்து இரு ஆண்டுகளாக பெருமதிப்பு மிக்க Queen’s Award for Enterprise இனை வென்று அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு நவீன பல்கலைக்கழகமான ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster உடன் பங்குடமையையும் IIT campus கொண்டுள்ளது. கடந்தகாலத்தில் Manchester Metropolitan University மற்றும் Keele University ஆகிய பல்கலைக்கழகங்களின் உள்வாரி பட்டப்படிப்பு கற்கைநெறிகளையும் IIT வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் நன்மதிப்புடைய பிரித்தானிய பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதலாவது தனியார் உயர் கல்வி நிலையம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster மற்றும் Robert Gordon University ஆகியவற்றின் பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு வலுவூட்டுவதில் IIT முக்கியமான பங்கு வகித்துள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு, சர்வதேச வர்த்தக மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கு பங்களிப்பினை வழங்கி வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாகவும், மற்றும் தகவல் தொழில்நுட்ப / வர்த்தகத் தொழிற்துறை சார்ந்தவர்களாகவும் மாறியுள்ளனர். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் பல நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக பணி புரிய உதவியுள்ளது.

Most Viewed