Back to Top

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம்

October 10, 2019  06:41 pm

Bookmark and Share
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே அத தெரணவுக்கு தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் எனவும் அரச அச்சகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரச அச்சகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவில் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் மிக நீளமான வாக்குச்சீட்டை அச்சுடுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய அச்சிடப்படும் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Most Viewed