Back to Top

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியே தமிழ் மக்களின் வெற்றி

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியே தமிழ் மக்களின் வெற்றி

October 10, 2019  11:39 pm

Bookmark and Share
நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்கத்தின் ஊடாக எதிர்ப்பார்த்த எதனையும் பெற முடியாத நிலையில் இன்று தவிக்கும் தமிழ் மக்கள் புதிய மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள் என ஊடகங்களுக்கு தெரிவித்த ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி பௌத்த, கிறிஸ்தவ சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய ஒரு தலைவரின் ஊடான தமிழ் மக்களுக்கான தீர்வே நிலையானதாக இருக்கும். அது மஹிந்த அணியின் ஊடாகவே இடம்பெறும்  என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷவிற்கு முழுமையான ஆதரவை எமது கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, எமது தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் பெறப்பட வேண்டும். அதே நேரத்தில் ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அபிவிருத்திகளும் எமது மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.

தீபாவளிக்கும் பொங்களுக்கும் கிடைக்கவிருக்கின்ற அரசியல் தீர்வை எதிர்ப்பார்த்து நாம் ஏமாந்து போயிருக்கின்றோம். நிலையான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வை எதிர்ப்பார்த்து கடந்த ஐந்து வருடகாலமாக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். முக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். யதார்த்தத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் அதிகாரங்களுக்கும் அதன் ஊடாக கடந்த ஐந்து வருடகாலத்தில் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான தனிப்பட்ட நபர்களின் நிகழ்ச்சி நிரலுக்காக எமது மக்களின் தாயக வேட்கையை இழந்து விட முடியாது.

சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பார்ப்பு மஹிந்தவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கே இருக்கின்றது. வெற்றி பெற முடியாத ஐ.தே.க வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவளித்து மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து யார் எதனை சாதிக்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. அதே போல் கடந்த நல்லாட்சியை உருவாக்குவோம் என்ற பெயரில் அதனை செய்து அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு ´கம்பெரலிய´ வைத்தா அரசியல் செய்கின்றது.

இப்படியான வரலாறு தவறுகளை செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு எதிர்வரும் தேர்தலில் யதார்த்த நிலையை உணர்ந்து எமது மக்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாற்று இனத்தவரின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வல்லமை எனக்கே இருக்கின்றது என்று நினைக்கின்றேன். நானே அதனை முன்னிலைப்படுத்தி வருகின்றேன்.

எனது வன்னி தமிழ் மக்களின் எதிர்காலம் நிலையானதாக இருப்பதற்காக நான் எதனையும் செய்யத்தயாராக இருக்கின்றேன். அதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் முழுமையான பிரச்சாரத்தில் ஈடுபடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.