Back to Top

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

October 21, 2019  08:38 am

Bookmark and Share
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019  நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 43600 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இனைந்து நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 2180 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அங்கு கடற்படையினர் 43600 சிகரெட்டுகளை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை விற்பனைக்கு தயாராக ஒரு வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கின்ற 23 வயதானவர் என கண்டரியப்பட்டுள்ளதுடன். இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸ் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Most Viewed