Back to Top

கல்முனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவுக்கு ஆதரவாக பிரசாரம் சூடுபிடிப்பு

கல்முனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவுக்கு ஆதரவாக பிரசாரம் சூடுபிடிப்பு

November 3, 2019  11:39 am

Bookmark and Share
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் பரவலாக பிரசார நடவடிக்கைகள் இன்று (3) முன்னெடுக்கப்பட்டன.

தாமரை மொட்டு இலச்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ,முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரது புகைப்படங்களுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் தலைவர் ரி.ஹரிபிரதாப் தலைமையில் கல்முனை நகர பகுதி எங்கும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துண்டுப்பிரசுரங்களை காலை தரவைப்பிள்ளையார் கோயிலில் காலை ஆராதனையுடன் அரசயடி அம்மன் கோவிலடி, பாண்டிருப்பு சந்தை ,தாளவட்டுவான் சந்தி ,நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,ஆகிய பகுதியில் அம்பாறை மாவட்ட அக்கட்சியின் ஆதரவாளர் நிமால் ஆரம்பித்து வைத்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-