Back to Top

யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பிரதமர்

யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பிரதமர்

November 3, 2019  12:10 pm

Bookmark and Share
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ் நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

ஐனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வடக்கிற்கு விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய நேற்று (02) யாழ் விஐயம் செய்த பிரதமர் யாழ் நகரிலுள்ள நாகவிகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் போது நாகவிகாரையின் விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த வழிபாட்டில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனரத்தின உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல தரப்புனர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை பிரதமர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ் ஆனைக்கோட்டை கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்

-யாழ். நிருபர் பிரதீபன்-