Back to Top

சொந்த மண்ணில் வைத்து இந்தியாவை வீழ்த்திய பங்களாதேஷ்

சொந்த மண்ணில் வைத்து இந்தியாவை வீழ்த்திய பங்களாதேஷ்

November 4, 2019  07:54 am

Bookmark and Share
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ரோகித் சர்மா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஷிகர் தவான் 4 1 ஓட்டங்களில் வெளியேறினார்.

இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து, 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ், மொகமது நயீம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

லித்தன் தாஸ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் நயீமுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து 46 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் நயீம் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் சவுமியா சர்க்காருடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். கிடைத்த பந்துகளில் ஒன்று, இரண்டு, பவுண்டரி என அடித்தனர். இந்த ஜோடி 62 ஓட்டங்கள் சேர்த்தபோது சவுமியா சர்க்கார் ஆட்டமிழந்தார். சர்க்கார் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது பங்களாதேஷ் அணி 18 பந்தில் 35 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

இது இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி 20 தொடரில் 1-0 என பங்களாதேஷ் முன்னிலை வகிக்கிறது.

Most Viewed