Back to Top

 தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

November 4, 2019  11:25 am

Bookmark and Share
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் இன்றும் (04) நாளையும் (05) தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மலையகத்தில் இன்று காலை வேளையிலேயே பொலிஸார் வாக்களிக்க ஆரம்பித்தனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், வெருகல், புல்மோட்டை, கோமரங்கடவெல போன்ற பகுதிகளிலும் அனைத்து பொலிஸ் அலுவலகங்களிலும் வாக்குத் பதிவு நடைபெற்று வருகின்றன.

அத்தோடு தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

(திருகோணமலை நிருபர் பாருக்)

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-