Back to Top

செரண்டிப் ஃபிளார் மில்ஸ் SLIM NASCO 2019 இல் தங்க விருதினை வென்றது

செரண்டிப் ஃபிளார் மில்ஸ் SLIM NASCO 2019 இல் தங்க விருதினை வென்றது

November 7, 2019  03:24 pm

Bookmark and Share
செரண்டிப் ஃபிளார் மில்ஸ் இலங்கையில் உயர் தரமான 7 Star கோதுமை மா உற்பத்தி செய்வோர் ஆவர். இவர்கள் 2 தங்க விருதுகளும் 1 வெண்கல விருதும் உள்ளடங்கலாக 3 விருதுகளை அண்மையில் இடம்பெற்ற தேசிய சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த (SLIM) தேசிய விற்பனை மாநாட்டில் 2019 (NASCO) இல் வென்றது.

இரன்டு தங்க விருதுகள் மத்தியஃகிழக்கு பிராந்திய, பிரதேச முகாமையாளரான அஜித் தாந்திரிகே, பெருநிறுவன விற்பனை: பிராந்திய முகாமையாளர் பிரிவிலும், இந்திக துஷார விஜேசிங்ஹ - தொழில்நுட்ப விற்பனை நிர்வாகி, பெருநிறுவன விற்பனை: துணைச் சேவைகள் எனும் பிரிவிலும் வென்றனர். வெண்கல விருதினை KHC சஞ்ஜீவ எனும் பெருநிறுவன விற்பனை: விற்பனைப் பிரதிநிதி பிரிவில் நீர்கொழும்பு - விற்பனைப் பிரதிநிதி வென்றார்.

செரண்டிப் ஃபிளார் மில்ஸ் இல் 12 வருடகாலங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் கண்டி, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, தெஹியத்தகண்டிய மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் சேவை செய்த அனுபவமும் அஜித் தாந்திரிகேவுக்கு உள்ளது. இந்திக துஷார விஜேசிங்ஹ 10 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் உணவுத்தொழிற்துறையில் விற்பனை பிரதிநிதியாக, பிரதேச விற்பனை மேற்பார்வையாளராக மற்றும் பேக்கரி செய்முறையாளராக பணியாற்றியுள்ளார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற கம்பனியின் 5வது வருடாந்த விற்பனை மாநாட்டில் ஆண்டுக்கான 7 ஸ்டார் தொழில்நுட்ப பிரதிநிதி (“7 Star Technical Executive of the Year 2018”) என்ற விருதினை இந்திக பெற்றுக்கொண்டார். KHC சஞ்ஜீவ, 2007ஆம் ஆண்டு முதல் செரண்டிப் ஃபிளார் மில்ஸ் இல் பணியாற்றுவதுடன் வத்தளை, நீர்கொழும்பு மற்றும் திவுலபிடிய ஆகிய பிரதேசங்களில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உள்ளது. இவர் “7 Star B2B Sales Executive of the Year” என்ற விருதினை கம்பனியின் 5வது வருடாந்த விற்பனை மாநாட்டில் வென்றவர் ஆவார்.

இலங்கையின் தேசிய சந்தைப்படுத்தல் அமைப்பான, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM) 1970 முதல் சந்தைப்படுத்தல் தரங்களை மேம்படுத்துவதுடன் சந்தைப்படுத்தலின் சிறப்புத் தன்மையினை ஊக்குவிக்கிறது. ஆரம்பம் முதல் SLIM NASCO விருதுகள் திட்டமானது இலங்கையில் விற்பனைக்கான உன்னதமான நிகழ்வாக மிக வேகமாக மாறியுள்ளது. இது வேறுபட்ட தொழில்துறைகளில் தங்கள் பல்வேறுபட்ட தொழில் நோக்கங்களுக்காக விற்பனை பிரதிநிதிகளை அங்கிகரித்திடும் நிகழ்வாக காணப்படுகிறது. ஒரு சிறந்த நடுவர்கள் குழுவினால் அனுமதிக்கப்பட்ட நுழைவுகளை திரையிடல் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நாட்டின் சிறந்த விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

காலிங்க விஜேசேகர – தலைவர் - செரண்டிப் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் இந்த வெற்றியினைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “SLIM NASCO 2019 இல் எமது மூன்று விற்பனை அணி உறுப்பினர்கள் விருதுகளை வென்றுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் பல்வேறுபட்ட பெருநிறுவன அமைப்புக்களுடன் போட்டியிட்டு இவர்கள் இவ்விருதினை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடுமையான போட்டித்தன்மையுடன் இந்த பெருமைமிகு விருதினை வென்றிடும் சந்தர்ப்பத்தினை உருவாக்கிடும் SLIM NASCO வுக்காக நாட்டின் விற்பனை நிபுணர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.

வெற்றியாளர்கள் தேசிய தளத்துடன் இணைக்கப்படுவதால் அவர்களது தொழிலுக்கும் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தின் மனித மூலதனம் பற்றிய விபரங்களுக்கும் இவை பயனுள்ளதாய் அமையும். கடந்த ஆண்டு முதன்முறையாக நாம் இரண்டு விருதுகளை SLIM NASCO வில் வென்றோம். இம்முறை நாம் மேலும் முன்னேறி 2 தங்க விருதுகளுடன் ஒரு வெண்கல விருதினையும் வென்றுள்ளோம். இது எமது விற்பனை அதிகாரிகளின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் நிபுணத்துவத்தினை புலப்படுத்துகிறது.´

செரண்டிப் ஃபிளார் மில்ஸ் பிரை. லிமிட்டட் முதலீட்டுச்சபையினால் அனுமதியளிக்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும். இதற்கு புகழ்பெற்ற டுபாயைச் சேர்ந்த முதலீட்டாளர்களான Al Ghurair விளங்குகின்றனர். தேசத்திற்கு ஊட்டச்சத்தளிக்கும் மா தெரிவாக ´7 ஸ்டார்´ உற்பத்திகள் திகழ்கின்றன. நாடெங்கிலும் உள்ள பேக்கரிகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்துமிக்க மற்றும் பல்வகையான மா உற்பத்திகளை வழங்குவதில் அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாக இது இருக்கின்றது. கொழும்பு துறைமுகத்திலிருக்கும் அதிநவீன ஆலை வசதியுடன் செயற்படும் செரண்டிப் ஃபிளார் மில்ஸ் தரம் மற்றும் பாதுகாப்பில் உன்னதத்தினை பின்பற்றுகிறது. ISO 9001:2015, ISO 14001:2015, ISO 22000:2005, FSSC 22000, BS OSHAS 18001:2007 சான்றிதழ்களை கம்பனி பெற்றுள்ளது. அத்தோடு பச்சைவீட்டு வாயு உமிழ்வு மற்றும் கழிவுகளை குறைத்தல் மூலம் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்க தொடர்ந்தும் முயற்சிக்கிறது. ஆற்றல் மிக்க நீர் பாதுகாப்பினையும் தமது செயற்பாடுகளின் மூலம் மேற்கொள்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.