Back to Top

சிங்கர் அறிமுகப்படுத்தும் உயர் திறன் கொண்ட ஆறு வகையான ஸ்மார்ட் இன்வேர்ட்டர் (Smart Inverter) குளிர்சாதனப் பெட்டிகள்

சிங்கர் அறிமுகப்படுத்தும் உயர் திறன் கொண்ட ஆறு வகையான ஸ்மார்ட் இன்வேர்ட்டர் (Smart Inverter) குளிர்சாதனப் பெட்டிகள்

November 7, 2019  03:40 pm

Bookmark and Share
நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர், கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற கோலாகலமான நிகழ்வில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட, புத்தாக்கம் கொண்ட, ஆறு வகையான குளிர்சாதனப்பெட்டிகளை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான மொஹான் பண்டிதகே, சிங்கர் ஸ்ரீலங்கா கூட்டாண்மை நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன, சிங்கர் ஸ்ரீங்கா பீஎல்சியின் சந்தைப்படுத்தல் துறைப் பணிப்பாளரான குமார் சமரசிங்க ஆகியோர் இந்த அறிமுக வைபவத்தில் கலந்துகொண்டு தலைமை தாங்கி சிறப்பித்துள்ளனர்.

260 முதல் 300 லீட்டர் வரையான உயர் கொள்ளளவுத் திறன், புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள தயாரிப்பு வடிவங்களின் சிறப்பம்சமாகும். inverter தொழில்நுட்பத்துடன் மின்வலுவைச் சேமிக்க உதவும் குளிர்சாதனப்பெட்டியான R600a, வழக்கமாக அதிகளவான மின்வலுவை நுகரும் இந்த வகையான குளிர்சாதனப்பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் மிகுந்த தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில் R600a தொழில்நுட்பத்தை சிங்கர் நிறுவனமே முதன்முதலில் அறிமுகப்படுத்தியிருந்ததுடன், அதன் செயல்திறன் கொண்ட மின்வலுச் சேமிப்பு சிறப்பம்சத்தால் இது மிக வேகமாக பிரபலமடைந்தது. குளிர்சாதனப்பெட்டி சந்தையில் சிங்கர் நிறுவனம் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதுடன், இலங்கையில் 50% இற்கும் மேற்பட்ட சந்தைப் பங்கினையும் கொண்டுள்ளது. இதற்குப் புறம்பாக முதன்முதலாக இலங்கையில் வடிவமைக்கப்பட்ட Geo ஸ்மார்ட் நுண்ணறிவு (Geo Smart intelligent) குளிர்சாதனப்பெட்டியையும் 2018 ஆம் ஆண்டில் சிங்கர் அறிமுகப்படுத்தியிருந்தது. 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டிகளை சிங்கர் விற்பனை செய்துள்ளதையிட்டு அது பெருமை கொள்கின்றது. இதன் மூலமாக மிகுந்த திருப்தியை அடையப்பெறும் வாடிக்கையாளர்கள், குறிப்பாக குறைந்தளவு மின்வலு நுகர்வுடன் இந்த குளிர்சாதனப்பெட்டிகளை உபயோகிப்பதால் கிடைக்கும் அனுகூலங்களை எடுத்தியம்பி வருவதால், சூழலுக்கு தீங்கற்ற இந்த குளிர்சாதனப்பெட்டிகளை ஊக்குவிப்பதற்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.

சிங்கர் ஸ்ரீலங்கா கூட்டாண்மை நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், ´இலங்கையில் குளிர்சாதனப்பெட்டிகள் சந்தையில் முன்னிலை வகிப்பதென்பது மிகப் பாரியதொரு சாதனையாகும். புத்தாக்குனர் என்ற வகையில், அதிநவீன தொழில்நுட்பம், குறிப்பாக மின்வலுவைச் சேமிக்கும் சிறப்பம்சங்கள் கொண்ட மிகச் சிறந்த குளிர்சாதனப்பெட்டிகளில் ஒன்றை இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்து வைக்க முடிந்துள்ளதுடன், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உற்பத்தியொன்று சர்வதேச தராதரங்களுக்கு ஒப்பானதாக உள்ளமையை காண்பது எமக்கு பெருமையளிக்கின்றது. ஆறு தயாரிப்பு வடிவங்களை அறிமுகப்படுத்துவது கூட ஒரு சாதனையே,´ என்று குறிப்பிட்டார்.

தாங்கள் தற்போது உபயோகித்து வருகின்ற குளிர்சாதனப்பெட்டிகளுக்கு பதிலாக உயர் கொள்ளளவு ஆற்றல் கொண்டவற்றை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்ற வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பாரிய கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டிகளை கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் பாரிய கொள்ளளவு கொண்ட இந்த குளிர்சாதனப்பெட்டிகளை தயாரிப்பினை சிங்கர் முன்னெடுத்துள்ளது.

260 லீட்டர் மற்றும் 300 லீட்டர் வடிவங்களே புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சிங்கர் குளிர்சாதனப்பெட்டிகளாக காணப்படுவதுடன், இடைக் கைப்பிடி வடிவம் (recess handle model), கைப்பிடி வடிவம் (handle model) மற்றும் கண்ணாடி கறுப்பு வர்ண வடிவங்களில் (Mirror finish elegant black colour model) கிடைக்கப்பெறுகின்றன. வாடிக்கையாளரின் தெரிவிற்கு எப்போதும் முதலிடம் அளிக்கும் ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், வாடிக்கையாளர்களை பூரிப்பில் உள்ளாக்கும் வகையில் ஒட்டுமொத்த முடிவு வேலைப்பாடு மற்றும் வடிவமைப்பில் சிங்கர் கவனம் செலுத்தியுள்ளது.

கதவுக் காப்பான் (Door sentry), சுமையைக் கண்டறியும் திறன் (Load detection), சுற்றுப்புற வெப்பநிலையை கண்டறிதல் (Ambient temperature detector), திறன் மின்வலு சேமிப்பு (Smart energy saver), ஈரப்பதன் கட்டுப்படுத்தி (Humidity controller), டிஜிட்டல் இன்வேர்ட்டர் (Digital inverter) போன்ற முக்கியமான தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் இப்புதிய வடிவங்கள் வெளிவந்துள்ளதுடன், சிங்கர் வழங்கும் முழுமையான 10 ஆண்டு உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன. குளிர்சாதனப்பொட்டியொன்றை தெரிவு செய்யும் போது எந்தெந்த சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றனவோ அவை அத்தனையுடனும் நவீன தேவைகளை இந்த குளிர்சாதனப்பெட்டிகள் நிறைவேற்றுகின்றன. மின்வலுவைச் சேமிக்கும் வழிமுறைகள், அதனுள் வைத்துப் பேணப்படுகின்ற உணவின் புத்தம்புதிய தன்மை கெட்டுப்போகாதிருத்தல், மற்றும் மிக முக்கியமாக பாதுகாப்பு தொழில்நுட்பம் என வாடிக்கையாளர்கள் தற்போது எதிர்பார்த்துள்ள அனைத்து தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் இந்த வடிவங்கள் கொண்டுள்ளன.

சிங்கர் ஸ்ரீங்கா பீஎல்சியின் சந்தைப்படுத்தல் துறைப் பணிப்பாளரான குமார் சமரசிங்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், ´இலங்கை மக்கள் என்ற வகையில், இலங்கையின் தயாரிப்புக்களான இந்த உற்பத்திகளையிட்டு நாம் பெருமைப்படுவதுடன், எமது சொந்த உற்பத்திகளுடன் இலங்கையில் குனிர்சாதனப் பெட்டி சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது என்பது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும். வெகுவிரைவில் மேலும் பல உள்நாட்டு உற்பத்திகளை இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,´ என்று குறிப்பிட்டார்.

சிங்கர் உற்பத்தி வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த உற்பத்திகளை நாடளாவியரீதியில் அனைத்து சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ், மற்றும் சிங்கரின் முகவர்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், மிகச் சிறந்த விற்பனைக்கு பின்னரான பேணற்சேவையுடன் பெறுமதிவாய்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் ஏனைய சலுகைகளையும் மகிழ்ச்சியுடன் வழங்க சிங்கர் முன்வந்துள்ளது. வாடகைக் கொள்வனவு வசதிகள், கடனட்டை மற்றும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களையும் சிங்கர் வழங்கி வருகின்றது.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்பான விபரங்கள்

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நாடெங்கிலும் வளர்ச்சி கண்டு வருகின்ற தனது நுகர்வோர் தளத்திற்கு உயர் தரம் கொண்ட பல்வேறுபட்ட உயர் தரமான உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் பிரசித்தி பெற்றுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்காக எண்ணற்ற விருதுகளை இந்நிறுவனம் வென்றுள்ளதுடன், அவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல், SLIM Nielson மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகளாக நாட்டில் மக்களின் அபிமானத்தை வென்ற வர்த்தகநாமமாக சிங்கர் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்றது.