Back to Top

பிஸ் கிளப் உறுப்பினர்களும் தொழில் முனைவர்களுமென 150 பேருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியது கொமர்ஷல் வங்கி

பிஸ் கிளப் உறுப்பினர்களும் தொழில் முனைவர்களுமென 150 பேருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியது கொமர்ஷல் வங்கி

November 7, 2019  04:27 pm

Bookmark and Share
கொழும்பிலும் நீர்கொழும்பிலுமென, இரண்டு வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை கொமர்ஷல் வங்கி அண்மையில் நடத்தியிருந்தது. வங்கியின் பிஸ் கிளப் (Biz Club) அங்கத்தவர்களுக்கும் சிறிய - நடுத்தர தொழில்முனைவுப் (SME) பிரிவிலுள்ள தொழில் முனைவோருக்கும் ஆதரவை வழங்கி, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் முன்னெடுப்புக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

´சிறிய - நடுத்தர தொழில் முனைவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்´ என்ற கருப்பொருளைக் கொண்டு கொழும்பு நிகழ்வு அமைந்திருந்ததோடு, தாஜ் சமுத்ரா ஹோட்டலின் கிரான்ட் கிறிஸ்டல் போல் றூமில் இது இடம்பெற்றிருந்தது. சிறிய - நடுத்தர தொழில்முனைவுத் துறையில் வரிஅறவீடு, புதுப்பிக்கத்தகு சக்தியும் கழிவு முகாமைத்துவமும் என, இரண்டு விரிவுரைகள் வழங்கப்பட்டன. அவை முறையே இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பெரிய நிறுவனமேன் முறையீடுகளும் ஆட்சேபனைகளும் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. சமன் திஸாநாயக்க, ஆலோசகரும் சக்திக் கணக்காய்வாளருமான திரு. நிமால் பெரேரா ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தன.

மேலதிகமாக, ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், பிலீட்டா (தனியார்) நிறுவனம், வங்கியால் அழைக்கப்பட்டிருந்த வெளியக வணிகங்கள் ஆகியன, சிறிய - நடுத்தர தொழில்முனைவுகளுக்கான தமது புத்தாக்கத் தீர்வுகள் தொடர்பாக விளக்கங்களை ´தொழிலாளர் குழுப் பாதுகாப்புக் கொள்கை´, உலகத் தரம் வாய்ந்த முகில் வலையமைப்பை அடிப்படையாகக் கொண்ட வணிகத் தீர்வுப் பொதித் திட்டமான ´Entution´ பற்றியும் விளக்கமளித்திருந்தன.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பிஸ் கிளப் அங்கத்தவர்களுக்கு மேலதிகமாக கொமர்ஷல் வங்கியின் பணியாளர்களான திரு. ஜானக சூரியராச்சி - கொழும்பு மெட்ரோ பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர், திருமதி யஸ்மின் வீரசூரிய - உயர் கொழும்பு பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர், திருமதி தர்ஷனி கீர்த்திரத்ன - கொழும்பு தெற்குப் பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர், திரு. மாலிக சில்வா - வங்கியின் அபிவிருத்திக் கடன் திணைக்களத்தின் முகாமையாளர், திரு. டில்ஷான் பெர்ணான்டோ - சிறிய - நடுத்தர தொழில்முனைவுப் பிரிவின் முகாமையாளர் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.

இரண்டாவது நிகழ்ச்சித் திட்டம், நீர்கொழும்பிலுள்ள கோல்டன் ஸ்டார் பீச் ஹோட்டலில் நடத்தப்பட்டதோடு, தேங்காயை அடிப்படையாகக் கொண்ட தொழிற்றுறையை இலக்காகக் கொண்டிருந்தது. வளவாளர்களான திரு. சம்பத் சமரவிக்ரம - தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் சந்தைப்படுத்தல் அபிவிருத்திக்கும் ஆராய்ச்சிக்குமான பணிப்பாளர், கலாநிதி டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமராச்சி - தேசிய பயிர் தொற்று நோய்க் கட்டுப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளர் ஆகியோர் ´தேங்காயை அடிப்படையாகக் கொண்ட தொழிற்றுறைக்கான ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள்´ பற்றிப் பிரதான விரிவுரைகளை வழங்கியிருந்தனர். அதேநேரத்தில், ஆலோசகரும் சக்திக் கணக்காய்வாளருமான திரு. நிமால் பெரேரா, புதுப்பிக்கத்தக்க சக்தியும் கழிவு முகாமைத்துவமும் பற்றி விளக்கமளித்திருந்தார். மூன்றாவது விரிவுரை, இலங்கை சுங்கத்தால் வர்த்தகஎளி தாக்கல் தொடர்பில் வழங்கப்பட்டதோடு, சுங்கத் திணைக்களத்தின் கண்காணிப்பாளரான திரு. அஷோக பாலசூரியவால் அது வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, ´தொழிலாளர் குழுப் பாதுகாப்புக் கொள்கை´ தொடர்பாக ஜனசக்தி காப்புறுதியால், கொமர்ஷல் வங்கியின் அழைப்பின் பேரில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் திரு. சனத் பெரேரா - கொழும்பு வடக்குக்கான பிராந்திய முகாமையாளர், திருமதி சந்தனிசியம் பலாகஸ் தென்ன - வயம்ப பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர், திரு. மாலிக சில்வா - அபிவிருத்திக் கடன் திணைக்களத்தின் முகாமையாளர், திரு. டில்ஷான் பெர்ணான்டோ - சிறிய - நடுத்தர தொழில்முனைவுப் பிரிவின் முகாமையாளர் உள்ளிட்ட, கொமர்ஷல் வங்கியின் பணியாளர்களில் பலர் பங்குபற்றியிருந்தனர்.

´பிஸ் கிளப்´ என்பது 2017 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சிறிய - நடுத்தர தொழில்முனைவுகளுக்கு அதிகரித்த வலையமைப்பு வாய்ப்புகள், கடன் வழங்கலுக்கு மேலான ஆதரவு, விசேட வங்கிச் சலுகைகள், தன்மயமாக்கப்பட்ட விஸா டெபிட் கார்ட்கள் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக பொருளாதாரத் தகவல்களும் விழிப்பூட்டல் தகவல்களும் வழங்கப்படுவதோடு, இணையம் மூலமாக வங்கி வசதிகளுக்கு முதலாவது ஆண்டுக்கான கட்டணம் இலவசம் உள்ளடங்கலாக இலவச பதிவு வசதியும் வழங்கப்படுகிறது. மேலதிகமாக, பிஸ் கிளப் அங்கத்தவர்கள் அவர்களின் வணிகங்களின் அபிவிருத்திக்கு அனுகூலங்களை வழங்கக்கூடிய இலவச நிதியியல் ஆலோசனைச் சேவைகளையும் பிரத்தியேகமாக வணிகச் செயலமர்வுகளுக்கான அழைப்பிதழ்களையும் பெறுவதற்கான உரித்துடைமையைக் கொண்டவர்கள்.

சிறிய - நடுத்தர தொழில்முனைவுகளுக்கும் நுண் தொழில்முனைவாளர்களுக்கும் இவ்வாறான அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொமர்ஷல் வங்கியானது, பிஸ் கிளப் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னிருந்தே மேற்கொண்டு வந்தது. இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள், இதுவரை 9,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு நன்மையளித்துள்ளன.

வங்கியின் 16 விவசாய, நுண் நிதியியல் பிரிவுகளால் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் ஆதரவளிக்கப்படுகின்றன. தமது விவசாய நடவடிக்கைகளையோ அல்லது நுண் வணிகத்தையோ விருத்தி செய்வதற்கு உதவி தேவைப்படும் தொழில்முனைவோரின் விசேடமான தேவைகளை அடையாளங்காண இவை உதவுகின்றன. விவசாயக் கடன்கள், நுண் நிதி வழங்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்தப் பிரிவுகள் செயற்படுகின்றன.

கொமர்ஷல் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதியியல் பிரிவுகள் இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுர, கிளிநொச்சி, பண்டாரவளை, வெல்லவாய, ஹிங்குராங்கொட, கலாவெல, அச்சுவேலி, வவுனியா, காத்தான்குடி, திஸ்ஸமஹாராமை, நெலுவ, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, கிராமியச் சமுதாயங்களைப் பிரதானமாக இலக்கு வைத்து அவற்றின் உள்ளடக்கமான நிதியியலுக்காக மூன்று நடமாடும் வங்கி (Bank-on-Wheels) திட்டங்களை வடக்கு, கிழக்கு, ஊவா - சப்ரகமுவ பிராந்தியங்களில் வங்கி மேற்கொள்கிறது.