Back to Top

Galaxy Note10|10+ மற்றும் Galaxy A80 ஆகியவற்றுக்கு ‘Break Free’ சலுகையை மீண்டும் வழங்கிடும் Samsung

Galaxy Note10|10+ மற்றும் Galaxy A80 ஆகியவற்றுக்கு ‘Break Free’ சலுகையை மீண்டும் வழங்கிடும் Samsung

November 7, 2019  04:41 pm

Bookmark and Share
இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung தமது வாடிக்கையாளர்களுக்கு இன்னுமொரு மகிழ்ச்சியளித்திடும் சலுகையினை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் காணப்பட்ட அதீத வரவேற்பின் காரணமாக Samsung தமது ‘Break Free’ சலுகையினை மீண்டும் கொண்டு வருகிறது. இது முதலாவது தவணைக் கட்டணத்தினை தள்ளுபடி செய்து கவர்ச்சிகரமான வட்டி இல்லாத தவணைத் திட்டத்துடன் இலவசமாக திரை மாற்றீட்டினை (screen replacement) தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஃபோனின் திரை (screen) ஆனது காட்சி சார்ந்ததாகவும் மற்றும் டிநணநட அற்றதாகவும் இருப்பதால் ஸ்கிறீன் சிதைவடைவதானது மிகவும் கவலையான விடயமாக காணப்படுகிறது.

இதை அறிந்து வைத்துள்ள Samsung, தமது வாடிக்கையாளர்களின் மனதுக்கு அமைதியைத் தந்திடும் சரியான தீர்வாக ‘Break Free’ சலுகை அமைந்திடும் என நம்புகிறது. இன்றைய காலத்தில் சிதைவடைந்த ஸ்கிறீனினை மாற்றீடு செய்வது என்பது விலை உயர்வானதாக காணப்படுவதனால் இந்த ஒரு முறை இலவசமாக செய்து தரப்படும் திரை மாற்றீட்டுச் சலுகை, தவறவிடக்கூடாத ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும்.

Galaxy Note 10|10+ மற்றும் Galaxy A80 ஆகியவை உன்னதமான ஸ்மார்ட் ஃபோன்கள் என்பதுடன் Samsung இன் மேன்மையான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளன. தற்போது தெரிவு செய்யப்பட்ட கடனட்டைகளுடன் கவர்ச்சிகரமான தவணைக்கட்டண திட்டங்களுடன் ஒவ்வொரு கொள்வனவின் போதும் முதலாவது தவணைக் கட்டணத்திற்கு தள்ளுபடியினையும் வழங்குவதால் இச்சாதனங்களை கொள்வனவு செய்திடும் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகையானது அதிக சேமிப்பினையும் வழங்குகிறது. இச்சலுகை 2019, டிசம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung தொடர்ந்தும் தமது வாடிக்கையாளர் தளத்தினை விரிவுபடுத்திட மூலோபாய கூட்டிணைவுகளில் நுழைந்து தமது விநியோக வலைபின்னலினை அபிவிருத்தி செய்கிறது.

Samsung Sri Lanka மொபைல் தொலைபேசிகளை பழுது பார்ப்பதற்கு 16 நிலையங்களும், நுகர்வோர் இலத்திரனியல் பொருட்களுக்கு 15 நிலையங்களும் உள்ளடங்கலாக நாடு முழுதும் உள்ள 31 சேவை நிலையங்கள் மூலம் விற்பனைக்கு பின்னரான சேவைகளை வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதற்கு அடையாளமாக கொழும்பை அண்டிய பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு 1 மணி நேரத்தில் மொபைல் தொலைபேசிகளை பழுதுபார்த்திடும் சேவையினையும் தற்போது ஆரம்பித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த Break Free சலுகை தொடர்பாக எந்தவொரு உதவியினையும் பெற்றுக்கொள்ள Samsung வாடிக்கையாளர் அழைப்பு நிலையத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும். திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை வாடிக்கையாளர் வசதிக்காக வேலை நேரத்தினை நீடித்தும் உள்ளது.

Most Viewed