Back to Top

திருமணத்தை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த தம்பதிகள்...

திருமணத்தை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த தம்பதிகள்...

November 8, 2019  11:27 am

Bookmark and Share
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அந்நாட்டு அணியுடன் 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா இடையிலான முதல் டி 20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டி 20 போட்டி நவம்பர் 5 ஆம் திகதி கான்பெர்ராவில் நடைபெற்றது.

நாணயசுழற்சியை வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

தலைவர் பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 62 ஓட்டங்கள் விளாசியதால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் சேர்த்தது.

இதை அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது திருமண விழா நடந்து கொண்டிருந்த போதும் மணப்பெண்ணுடன் இணைந்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டி20 போட்டியை டி.வி.யில் கண்ணிமைக்காமல் கண்டுகளித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹசன் தஸ்லிம் அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்துவருகிறார். அவருக்கு கடந்த 5 ஆம் திகதி திருமணம் நடந்தது.

தங்கள் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை சுவாரசியமாக கண்டுகளித்தனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பதியர் கிரிக்கெட் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘தம்பதியரின் இலக்கு’ என்ற ஹேஷ்டேக்குடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது.

Most Viewed