Back to Top

முருகனின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

முருகனின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

November 8, 2019  03:09 pm

Bookmark and Share
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகனும் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் வாபஸ் பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரை தொடர்ந்து தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை நடத்திந்த முருகனின் மனைவியும் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தனது மனைவி நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் மற்றும் சிறைச்சாலையில் முன்பு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் மீள வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து முருகன் கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் முருகனின் கோரிக்கைகள் குறித்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் கூறியதற்கு அமைய அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுள்ளார்.

அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வேலூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு மாதம் பிணை வழங்கப்பட்வுள்ளது

சட்டத்துறையின் உத்தரவிட்கமைய அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறை விதிகளின்படி வழங்கப்படும் பிணையாக இது கருதப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு பேரறிவாளன் பிணையில் வெளியில் வந்த நிலையில் தற்போது அந்த பிணைக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளதால் அவருக்கு பிணை கிடைத்துள்ளது.

இந்த 30 நாட்கள் என்பது அவர் விருப்பப்படும் நாட்களிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரொபர்ட் பயஸின் பிணை விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள தனக்கு 30 நாட்கள் பிணை வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (07) மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது பிணை கோரிய விண்ணப்பத்தில் ரொபர்ட் பயஸ் தான் வசிக்கும் முகவரியை தெளிவாக குறிப்பிடமையால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தனது முகவரியை குறிப்பிட்டு ரொபர்ட் பயஸ் அளித்துள்ள புதிய பிணை விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாக அரச சட்டத்தரணி நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Most Viewed