Back to Top

சஜித்தினால் ஒருபோதும் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது

சஜித்தினால் ஒருபோதும் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது

November 8, 2019  11:46 pm

Bookmark and Share
பிரிவினைவாதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ள சஜித் பிரேமதாசவிற்கு ஒருபோதும் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாங்தொட்ட நகரில் நேற்று (07) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எந்தவித பிரிவினைவாதிகளின் தொடர்பும் இல்லாமல் மக்கள் மத்தியில் செல்லக்கூடிய ஒரே ஒரு சக்தி தேசிய மக்கள் சக்தியாகும்.

சஜித் வடக்கிற்கு சம்பந்தனின் தோழில் கை போட்டுக்கொண்டு செல்கிறார். அவ்வாறு இல்லாமல் அவரால் அங்கு செல்ல முடியாது.

எப்படியோ ஒரு வகையில் பிரிவினைவாதிகளிடம் இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்துள்ளன. இலங்கையில் பிரிவினைவாதிகளின் ஆதரவை பெறாத ஒரு அமைப்பு தேசிய மக்கள் சக்தியாகும்.

நாம் கிழக்கிற்கு சென்றோம் அப்போது காத்தான்குடிக்கு செல்ல வேண்டாம் என பிரிவினைவாத அரசியல்வாதி ஒருவர் கூறி அச்சுறுத்தினார். ஆனாலும் நாம் இரண்டு தடவைகள் அங்கு சென்றோம். அங்கு சென்று வெற்றிகரமான பிரச்சார கூட்டங்களை நடத்தினோம்.

கல்முனை, அக்கரைப்பற்று, கிண்ணியா, மூதூர், ஓட்டமாவடி, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு சென்று நாம் மக்களை சந்தித்தோம் அப்போது எந்த ஒரு பிரிவினைவதியினதோ, இனவாதியினதோ ஒத்துழைப்புடன் நாம் அங்கு செல்லவில்லை.

அதனால் வடக்கில் உள்ள தமிழர்களுக்கும், கிழக்கில்; உள்ள முஸ்லிம்களுக்கும், மலையக மக்களுக்கும், மற்றும் தெற்கில் உள்ள சிங்களவர்களுக்கும் ஒரே கூரையாக உள்ளது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

அவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்துள்ளமையின் ஊடாக நாட்டில் பிரிவினைவாதம் முற்றாக தோல்வியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளது.

நாம் இந்த தேர்தலில் பிரிவினைவாதத்திற்கு எதிரான அரசியில் வெற்றியை பெற்றுள்ளோம். ஆகவே பிரிவினைவாதத்தை தோற்கடிக்கும் ஒருவருக்கே தேசிய பாதுகாப்பையும், ஒற்றுமையும் உறுதிப்படுத்த முடியும்´ என்றார்.