
SLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு
November 13, 2019 06:07 pm
நாட்டின் முன்னணி மொபைல் சேவைகள் வழங்குநர் எனும் நிலையை மேலும் உறுதி செய்யும் வகையில், SLIM NASCO 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வில் மொபிடெல் பல விருதுகளை சுவீகரித்திருந்தது. ஒக்டோபர் 15 ஆம் திகதி BMICH இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும்
நிகழ்வில், மொபிடெலின் விற்பனை அதிகாரிகள் இந்த விருதுகளை சுவீகரித்திருந்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தம்மை அர்ப்பணித்துள்ள மொபிடெல் விற்பனை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு சகல மொபைல் சேவைகளையும் சௌகரியமான முறையில் பெற்றுக் கொடுப்பதில் முன்னிலையில்
திகழ்கின்றனர்.
நாட்டின் முன்னணி விற்பனை விருதுகள் வழங்கும் நிகழ்வில், மொபிடெலின் உறுதியான
பிரசன்னத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு உயர் தர சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக தமது ஊழியர்களுக்கு அவசியமான
பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பது, அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் மொபிடெல் மேற்கொள்ளும்
முதலீடுகளின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விற்பனை பிரதிநிதிகளின் முயற்சிகளையும், சாதனைகளையும்
கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்நிகழ்வை, வருடாந்தம் விற்பனை துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பெரும்
எதிர்பார்ப்புடன் வரவேற்பதுடன், இந்நிகழ்வில் விருதொன்றை வெற்றியீட்டுவது என்பது, தேசிய மட்டத்தில்
அவர்களின் திறமைகளை உணர்த்துவதாக அமைந்திருப்பதுடன், தமது சொந்த வளர்ச்சிக்கும், தொழில் வழங்குநரின்
வளர்ச்சிக்கும் அனுகூலமாகவும் அமைந்திருக்கும்.
விற்பனை ஊழியர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்ற
விருதுகள் வழங்கும் நிகழ்வாக கருதப்படும் SLIM NASCO, விற்பனை ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில்
கௌரவிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், மொபிடெல் சார்பாக அஜந்த வீரகோன் சிறந்த முன்னிலையாளர் பிரிவில் தங்க
விருதை சுவீகரித்திருந்தார். வெண்கல மற்றும் மெரிட் விருதுகளை இந்திக மஹாலிநன மற்றும் பியோனி தசநாயக்க
ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பிராந்திய முகாமையாளருக்கான பிரிவில் வெள்ளி விருதை ஹர்ஷ கலகன பெற்றுக்
கொண்டார். விற்பனை நிறைவேற்று அதிகாரி/விற்பனை மேலதிகாரி பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை
முறையே ருஹுணுகே அஜித் மற்றும் ரசிக கெகுலாவல ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதர விற்பனை உதவி ஊழியர்கள்
(முகாமையாளர் பிரிவு) பிரிவில் வெண்கல விருதை சஞ்ஜீவ டி சில்வா சுவீகரித்தார்.
இதர விற்பனை உதவி ஊழியர்கள்
பிரிவில் நிறைவேற்று அதிகாரிக்கான வெண்கல விருதை மனோஜ் தியாகராஜா பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளுக்கான
தெரிவு முறை மிகவும் கடுமையான விதிமுறைகளை கொண்டமைந்திருந்தது. துறையின் சகல பிரிவுகளையும் சேர்ந்த அனுபவம்
வாய்ந்த நிபுணர்கள் நடுவர்களாக செயலாற்றியிருந்தனர். குறித்த காலப்பகுதியில் இவர்களின் செயற்பாடுகள்
மதிப்பீடு செய்யப்பட்டதற்கு மேலாகரூபவ் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்குகளை எய்துவதுடன், விற்பனை பிரிவில்
உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான திறன் மற்றும் வியாபாரத்துக்கு மூலோபாய பெறுமதியை சேர்ப்பதற்காக காணப்படும்
மூலோபாய உள்ளீட்டு திறன் போன்றன தொடர்பிலும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விருதுகளை சுவீகரித்தமை தொடர்பில்ரூபவ் மொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் பெரேரா கருத்துத்
தெரிவிக்கையில், “SLIM NASCO 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வில் பல விருதுகளை வெற்றியீட்டிய எமது
விற்பனை நிபுணர்களின் திறமையான செயற்பாடுகளை காண்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எமது
ஊழியர்களின் தொடர்ச்சியாக ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக மொபிடெலுக்கு தொடர்ந்தும்
வெற்றிகரமாக செயலாற்ற முடிந்துள்ளது.
அவர்களின் திறன் விருத்திக்காக தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்ள
நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். “SLIM NASCO 2019 விருதுகள் வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் விற்பனைத் துறையைச் சேர்ந்த ஊழியர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில்,
வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றமைக்காக இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்துக்கு நான்
வாழ்த்துத் தெரிவிக்கின்றேன்.´ என்றார்.
பெருமைக்குரிய நிலையை கட்டியெழுப்பியுள்ள மொபிடெல், தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குவதிலிருந்து அப்பால்
சென்று, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வு மற்றும் மொபைல் பணம் போன்ற பிரிவுகளிலும்
தனது செயற்பாடுகளை விஸ்தரித்து தனது சேவைகளை வழங்கி வருகின்றது.
இலங்கையில் சந்தைப்படுத்தலின் தேசிய அமைப்பாக இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM) திகழ்கின்றது. 1970 ஆம்
ஆண்டு முதல் சந்தைப்படுத்தல் சிறப்பை ஊக்குவித்து வருவதுடன், சந்தைப்படுத்தலின் நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையை
முன்னெடுக்கின்றது. 2010 ஆம் ஆண்டில், ஒரு படி முன்னே சென்று, NASCO விருதுகள் வழங்கும் திட்டத்தை அறிமுகம்
செய்திருந்தது. பரந்தளவு துறைகளில் பணியாற்றும் விற்பனை பிரதிநிதிகளின் திறமையான செயற்பாடுகளை
கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த ஆண்டு இடம்பெற்ற NASCO விருதுகள்
வழங்கும் நிகழ்வினூடாக B2B மற்றும் B2B பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன.