குடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்
November 13, 2019 08:00 pm
எந்தவொரு நபரேனும் அமெரிக்க குடியுரிமையில் இருந்து விலகிக் கொண்டதற்கான சான்றிதழ் கிடைத்ததன் பின்னர், அவர் அமெரிக்காவின் குடியுரிமையில் இருந்து முழுமையாக விலக்கப்படுவதாக அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் நென்சி வென்ஹோன் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தாலும் அமெரிக்க குடியுரிமை இழக்கப்பட்ட நபரின் பெயர் அமெரிக்கா பெடரல் பட்டியலில் உள்ளடக்கப்படுவது வெறும் வருமான வரிக்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமையை இரத்து செய்வது மிகவும் நீண்டகால செயற்பாடு எனவும் யாரேனும் ஒருவருக்கு இந்த விடயம் தொடர்பில் அதிக ஆர்வம் இருப்பின் travel.state.gov என்ற இணைய தளத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையும் அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் மற்றும் ஒப்படைக்கும் நடவடிக்கைகளும் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த ஆவணங்கள் வொஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசாங்க திணைக்களத்திடம் இறுதியாக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.