
அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஹரீன் பெர்ணான்டோ அறிவிப்பு
November 17, 2019 12:16 pm
தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகிக்கும் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். எனது பதவிக்காலத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.