
குழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா
November 21, 2019 01:52 pm
நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான்.
இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, ´வருகின்ற 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7 ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்´ என்று கிண்டலுடன் கூறியுள்ளார். நடிகை சமந்தா தனது செல்ல நாய் குட்டியின் முதலாவது பிறந்தநாளை சமீபத்தில் கணவருடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.