
தனது ஆதரவாளர்களை சந்தித்த சஜித்
November 21, 2019 02:31 pm
புதிய ஜனநாயக முன்ணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (21) முற்பகல் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்த தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுடன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வை சிறிகோத்த கட்சித் தலைமையகத்தில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், நேற்று பிற்பகல் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அந்த நிகழ்வு இன்று இடம்பெறாது என குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், கொழும்பில் அமைந்துள்ள பிரதான கட்சி காரியாலயம் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.